பிரதமர் மோடி உத்தரவு எதிரொலி : விழுப்புரம் பள்ளிக்கு செல்லும் நிர்மலா

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (118)
Share
Advertisement
பிரதமர் மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அடுத்சி சில வாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விழுப்புரத்தில் உள்ள, தான் பயின்ற பள்ளிக்கு நேரில் செல்ல உள்ளார்.மத்திய பட்ஜெட் குறித்து விளக்கிக் கூறுவதற்காக, 15 மாநிலங்களில் நடக்கவுள்ள கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில், நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, வரும், 13ல், விழுப்புரம்

பிரதமர் மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அடுத்சி சில வாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விழுப்புரத்தில் உள்ள, தான் பயின்ற பள்ளிக்கு நேரில் செல்ல உள்ளார்.



latest tamil news



மத்திய பட்ஜெட் குறித்து விளக்கிக் கூறுவதற்காக, 15 மாநிலங்களில் நடக்கவுள்ள கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில், நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, வரும், 13ல், விழுப்புரம் மாவட்டத்தில், பா.ஜ., மகளிர் அணி நடத்தும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன், தமிழகம் செல்கிறார். இவர் பயின்ற, 'சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்' என்ற பள்ளி, விழுப்புரத்தில் தான் உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை, அந்த பள்ளியில் தான் இவர் படித்தார்.

விழுப்புரத்திற்குச் செல்லும்போது, அந்த பள்ளிக்கும் செல்ல, நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். அதை ஏற்று, தான் பயின்ற பள்ளிக்கு, நிர்மலா செல்ல உள்ளார்.


latest tamil news



இதுகுறித்து நம் நிருபரிடம் பேசிய நிர்மலா சீதாராமன், தன் சிறு வயது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:என் தந்தை, ரயில்வேயில் பணிபுரிந்தவர். சிறு வயதில், நான் ஒரு வைரசால் பாதிக்கப்பட்டேன். டாக்டர்கள், என்னை காப்பாற்ற முடியாது என கைவிரித்துவிட்டனர்.

இதனால், என் தாத்தா, பாட்டியும், நான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்டனர். எனினும், பூரண குணமடைந்தேன். அப்போது, ரயில்வே மருத்துவமனையின், 'வராண்டா'வில், என்னை வைத்திருந்தனர். பருவ மழை பெய்தபோது, ஒட்டுமொத்த மாவட்டமும், பெரும் சேதத்தை சந்தித்தது. ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அந்த நிகழ்வுகள் எல்லாம், இன்றும் நினைவில் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
07-பிப்-202119:49:36 IST Report Abuse
SENTHIL தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியமும், மறைமுக வரிகள் வாரியமும் கால தாமத கட்டணமாக பெரும் தொகையை வரி செலுத்துவோர் மீது திணித்து வரும் சமயத்தில், சிறு குறு தொழில் செய்வோர் நிலைமை படு மோசம். கோரோனோ மீட்பு காலத்தில் தொழில் செய்வதே பெரும் சவால். இதில் இவை போன்ற கண்டிப்பு நடவடிக்கைகலால் நிலைமை மேலும் மோசம். புதிய தொழில் முனைவோருக்கும், சிறு குறு தொழில் செய்வோருக்கும் கால நீட்டிப்பு அவசியம் தேவை படுகிறது. ஓர் லட்சம் இரண்டு லட்சங்களை அபராதமாக செலுத்துமளவுக்கு இலாபம் ஒன்றும் கோடிகளில் எல்லோருக்கும் வருவதில்லை.இதை மாண்புமிகு நிதியமைச்சர் புரிந்து கொண்டு கால நீட்டிப்பு அனுமதிக்க வேண்டும். இல்லைஎநில் நிலைமை தலை கீழ் என்பது பொதுவான சூழநிலை. நாட்டிற்கும் பின்னடைவு, கட்சிக்கும் இது பின்னடைவு . மோடிஜி தயவு செய்து இதை கவனியுங்கள். உங்கள் ஆட்சியில் அபார நம்பிக்கை கொண்ட என் போன்றோருக்கு இது மிக பெரும் மனக்கவலை.
Rate this:
Cancel
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
07-பிப்-202100:07:45 IST Report Abuse
SexyGuy . கோவில் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அங்கு கடவுளை அர்ச்சனை செய்யும் உரிமை எல்லோருக்கும் பொதுவாக்க பட வேண்டும். அதை விட்டு விட்டு , எவனோ சொன்னான், என்று சொல்லி இன்றும் பெரும்பாலானோர் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு, நாம் இந்து என்று சொல்லும் பித்தலாட்டம் நடக்காது. அப்பறம் காசுக்காக போய்ட்டான் என்று கூப்பாடு வேற.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
04-பிப்-202119:57:09 IST Report Abuse
dina நீர் உள்ள குளத்தில் தான் செந்தாமரை மலரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X