பொது செய்தி

இந்தியா

பட்ஜெட்டை கொண்டாடிய பங்குச் சந்தைகள்

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை : பட்ஜெட்டை கொண்டாடும் விதமாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று எழுச்சியைக் கண்டன.மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், 2,315 புள்ளிகள் அதிகரித்தது.இதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும், 647 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்தது. சந்தைகள் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள், நேற்று மட்டும், 6.34 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை அறுவடை செய்தனர்.பங்குச் சந்தைகளின் சாதகமான

மும்பை : பட்ஜெட்டை கொண்டாடும் விதமாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று எழுச்சியைக் கண்டன.மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், 2,315 புள்ளிகள் அதிகரித்தது.



latest tamil news



இதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும், 647 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்தது. சந்தைகள் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள், நேற்று மட்டும், 6.34 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை அறுவடை செய்தனர்.பங்குச் சந்தைகளின் சாதகமான போக்கால், நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடனேயே துவங்கின. பின், பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன், வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்ததை அடுத்து, சந்தைகள் மேலும் உயர்ந்தன.


latest tamil news



குறிப்பாக, உள்கட்டுமானம் மற்றும் சுகாதார பிரிவுகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டதை, முதலீட்டாளர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் கொரோனா செலவுகளை ஈடுகட்ட, புதிய வரி விதிக்கப்படாததையும் சந்தை வரவேற்றுள்ளது.இன்ஷூரன்ஸில் அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரித்ததும் வரவேற்கப்பட்டுள்ளது.நேற்றைய வர்த்தகத்தில், வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகள் விலை உயர்வைக் கண்டன. சென்செக்ஸ் பிரிவில் அதிகபட்சமாக, இண்டஸ்ட்இண்ட் வங்கி பங்குகள் விலை, 14 சதவீதம் உயர்ந்தன. ஐ.சி.ஐ.சி.,ஐ., எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஆகிய வங்கி பங்குகளும்; பஜாஜ் பைனான்ஸ், எல் அண்டு டி ஆகிய நிறுவன பங்குகளும் நேற்று அதிக ஏற்றம் கண்டன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-பிப்-202116:43:00 IST Report Abuse
தமிழவேல் இதில், ஏமார்ந்து ஒன்றிரண்டு விவசாயிகள், மண்டி கமிஷன் ஏஜெண்டுகள், தீவிர, சமூக விரோதிகள் பலன் அடைந்திருப்பார்கள்.
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-பிப்-202111:19:51 IST Report Abuse
Tamilan மக்கள் பணத்தை சூறையாடுவோம். தேவைப்படுமளவுக்கு மொத்தத்தையும் தூக்கி வீதியில் வீசியெறிவோம் என்று சூளுரைத்துள்ளார் . பின் தெருவில் உள்ள கொள்ளைக்காரர்களுக்கு சொல்லவா வேண்டும்?.
Rate this:
Cancel
Kalai Arashan - Quito,ஈக்வடார்
02-பிப்-202109:31:13 IST Report Abuse
Kalai Arashan சூப்பர், நிர்மலா சூப்பர், தொடரட்டும் உங்கள் தொண்டு வாழட்டும் இந்திய பெருங்குடிமக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X