அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி : டில்லியில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிய, போலீஸ் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மத்திய அரசின், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசு தினத்தன்று, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர்

புதுடில்லி : டில்லியில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிய, போலீஸ் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



latest tamil news



மத்திய அரசின், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசு தினத்தன்று, டில்லியில், விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை அரங்கேறியது. இந்நிலையில், இது தொடர்பாக, 'டில்லி சிட்டிசன் போரம் பார் சிவில் ரைட்ஸ்' என்ற, தொண்டு நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:அமைதியாக துவங்கிய டிராக்டர் பேரணி, வன்முறையில் முடிந்தது. அது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news



அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவேண்டும்.எனவே, அந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிய, போலீஸ் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



எனவே, அதில், இவ்வளவு விரைவாக, நீதிமன்றத்தால் தலையிட முடியாது. எனவே, இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-பிப்-202119:07:07 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நல்ல உத்தரவு அபராதம் விதித்துள்ளது.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
02-பிப்-202109:37:17 IST Report Abuse
GMM மனுதாரருக்கு 10000 அபராதம் குறைவு. மனுதாரர் இனி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர தடை செய்ய வேண்டும். 6 மாதம் காவல்துறை அதிகாரிகளுக்கு எடுபிடி வேலை செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் 5 ஆண்டுகள் சட்ட பணி செய்ய தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
02-பிப்-202112:41:37 IST Report Abuse
Dr. Suriyaஆனா சமூக வலை தளத்தில் இவர்களை இவர்கள் கொடுத்த தீர்ப்புகளை நார் நாராக உரித்து தொங்க போட்ட பூசன்னு ஒரு வக்கீலுக்கு ஒரு ரூபாதான் அபராதம்.... இது தான் நீதி.......
Rate this:
Cancel
Kalai Arashan - Quito,ஈக்வடார்
02-பிப்-202109:28:45 IST Report Abuse
Kalai Arashan இப்ப புரியுதா உங்களுக்கு, சொன்ன கேட்கனும் , நீதித்துறை சொன்னால் அல்ல (பிஜேபி)அரசுத்துறை சொன்னால் கேட்காணும் இலென்ன சடையெடுப்பான்
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
02-பிப்-202112:42:13 IST Report Abuse
Dr. Suriyaஆனா சமூக வலை தளத்தில் இவர்களை இவர்கள் கொடுத்த தீர்ப்புகளை நார் நாராக உரித்து தொங்க போட்ட காங்கிரசு வக்கீலுக்கு ஒரு ரூபாதான் அபராதம்.... இது தான் நீதி.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X