மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் | Dinamalar

மத்திய பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள்

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (6) | |
 விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, இளைஞர் வேலை வாய்ப்பு, பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான இந்தியா, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒட்டுமொத்த வளர்ச்சி உள்ளிட்ட எட்டு முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மேலும் இரு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்.

 விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, இளைஞர் வேலை வாய்ப்பு, பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான இந்தியா, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒட்டுமொத்த வளர்ச்சி உள்ளிட்ட எட்டு முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.latest tamil news கொரோனா தடுப்பூசிக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
 மேலும் இரு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்.
 கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.
 விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.
 நாடு முழுதும், 11 ஆயிரத்து 500 கி.மீ., துாரத்திற்கு சாலை திட்டம்.
 நாடு முழுதும் அகல ரயில்பாதைகள், 2023க்குள் மின்மயமாகும்.
 பேருந்து வசதிகளை மேம்படுத்த, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.


latest tamil news நகர்ப்புற குடிநீர் வசதி திட்டத்திற்கு, 2.87 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு .
 மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு.

 பங்கு சந்தைகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்.
 காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு, 74 சதவீதமாக அதிகரிப்பு.
 அரசு வங்கிகளுக்கு மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்.


latest tamil news
 வங்கியின் டிபாசிட் கணக்குகளுக்கான காப்பீடு, ஒரு லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு.
 பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை.


latest tamil news பங்கு சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம், எல்.ஐ.சி.,யின் பங்குகளை விற்க திட்டம்.
 இரண்டு பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீட்டு நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படும்.
 வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் தொடரும்.
 வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்.
 சென்னை உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும்.
 சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்.
 தேசிய மொழிகளை மொழிபெயர்க்க திட்டம். அரசின் அறிவிப்புகள், முக்கிய திட்டங்கள், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.
 மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 1,500 கோடி ரூபாய் சலுகை.
 சந்தைகளில் இருந்து, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற திட்டம்.


latest tamil news வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும், 'இ - நாம்' திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
 இதுவரை இல்லாத அளவாக, 6.48 கோடி பேர், வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
 முதியோருக்கு வருமான வரியில் சலுகை. 75 வயதானவர்கள், ஓய்வூதியம், வட்டியை மட்டும் நம்பி உள்ள மூத்த குடிமக்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்.
 வீட்டுக்கடன் வட்டிக்கு வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை. இவர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை.
 சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய, பழைய வாகனங்களை திரும்ப பெறும் கொள்கை அறிமுகம்.
 தங்கத்துக்கான இறக்குமதி வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, மீண்டும் 10 சதவீதமாக குறைப்பு.
 தனிநபர் வருமான வரி சலுகை அறிவிப்பு இடம் பெறவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X