கவர்னர் உரை புறக்கணிப்பு ஏன்? ஸ்டாலின் பேட்டி

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (134)
Advertisement
சென்னை: முதல்வர், துணை முதல்வர் ஊழலுக்கு கவர்னர் பக்கபலமாக உள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்காததால், கவர்னர் உரையை புறக்கணித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி
D.M.K, Governor, M.K.Stalin, Stalin, ஆளுநர், கவர்னர், தி.மு.க, ஸ்டாலின்

சென்னை: முதல்வர், துணை முதல்வர் ஊழலுக்கு கவர்னர் பக்கபலமாக உள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்காததால், கவர்னர் உரையை புறக்கணித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் பயன்பெற்றுள்ளது என கவர்னர் தெரிவித்துள்ளார். ஆனால், அது தமிழக மக்களுக்கு மத்திய அரசு அளித்த லாலிபாப் எனக்கூறியிருந்தேன்.
2015ம் ஆண்டு, மத்திய பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 2019ல், மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், 2021 ம் ஆண்டு ஆகியும் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதனால், தான் மத்திய பட்ஜெட் மூலம் தமிழக மக்களுக்கு அளித்த லாலிபாப் என விமர்சனம் செய்தேன்.பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளனர்.
கவர்னர் பேசும் போது, அமருங்கள் இது கடைசி பட்ஜெட் என தெரிவித்தார். இது தான் உண்மை. அதனை வரவேற்கிறோம். அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்.


latest tamil news


கடந்த டிச,22 கவர்னரிடம், அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர், அமைச்சர்களுக்கு பக்கபலமாக, ஊழலுக்கு கவர்னர் துணை நிற்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதனால் தான் கவர்னர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் ஊழல் தாண்டவமாடுகிறது. முதல்வர், துணை முதல்வர் கொள்ளையடித்த பணத்தின் மூலம் ஒராண்டு பட்ஜெட் போட முடியும். மக்கள் மன்றத்திற்கு சென்றோம். அங்கு ஆதாரங்களுடன் ஊழல் புகார் குறித்து எடுத்து கூற கடமைப்பட்டுள்ளோம். இங்கிருந்து பேசுவது பயன் கிடையாது. பேச அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gmoopan - thanjur,இந்தியா
03-பிப்-202110:53:42 IST Report Abuse
gmoopan இப்படிப்பட்ட கட்சியின் தலைவரும் சட்டசபை உறுப்பினர்களை எல்லாம் எதற்க makkal மீண்டும் மீண்டும் வெற்றி பெற வைக்கிறார்கள்.ஒரு உறுப்பினர் என்டர்ல தனது தொகுதியின் நாளை கவனிப்பாடகி விட்டு மதனை கூட்டம் மாதிரி நடந்து கொள்ளுகிறார்.மக்களே அடுத்த சட்ட சபை தேர்தலில் இந்த உறுப்பினர்களை தோலிவி அடையதா செய்து புதிய உறுப்பினருக்குவெற்றியை கொடுங்கள் தொகுதி வளரும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-பிப்-202108:30:58 IST Report Abuse
sankaranarayanan "கவர்னர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்று எதிர்க்கட்சி தலைவர் சொன்னதால், நீதிமன்றமே இதை தானாகவே முன்வந்து, ஆதாரமாகக் கருதி, அவரகள் அனைவருடைய ஒரு மாத சம்பளம் - கிம்பளத்தை குரானா நிதிக்கு தரச்சொல்லி உத்திராவிட வேண்டும் எங்கள் கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வரிப்பணம் வீணாகாக்கக்கூடாது நீதி மன்றமே தலையீடு மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்காமல் அமல்படுத்த வேண்டும் - நன்றி - ஜெய் பாரதம் வளர்க்க தமிழகம்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-பிப்-202105:34:59 IST Report Abuse
Matt P யாருப்பா... அந்த பெண்மணி ....மெரினாவில் நிக்கும் கண்ணகி சிலை மாதிரி ...சிலம்பு கையில் இல்லாத குறை தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X