போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் - 12 குழந்தைகள் பாதிப்பு

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
யவத்மால்: மஹாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் தவறுதலாக சானிடைசர் திரவம் அளிக்கப்பட்டதில் அவர்கள் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தை ஜனவரி 30 அன்று ராஷ்டிரபதி பவனில்
போலியோ, சானிடைசர், குழந்தைகள், மஹாராஷ்டிரா, அதிர்ச்சி, சொட்டு மருந்து,

யவத்மால்: மஹாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் தவறுதலாக சானிடைசர் திரவம் அளிக்கப்பட்டதில் அவர்கள் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தை ஜனவரி 30 அன்று ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆரம்பித்து வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா போலியோ இல்லாத நாடாக உள்ளது. கடைசியாக ஜன.,13, 2011 அன்று கடுமையான போலியோ வைரஸ் பதிவாகியது. அதன் பிறகு யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இருப்பினும் அண்டை நாடுகளான ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் கடுமையான போலியோ வைரஸ் உள்ளது. அங்கிருந்து மீண்டும் நாட்டிற்குள் வந்துவிடக் கூடாது என்பதனால் விழிப்புடன் ஆண்டு தோறும் தடுப்பூசி இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திங்களன்று மஹா., மாநிலம் யவத்மாலில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கைகழுவ பயன்படுத்தப்படும் சானிடைசர் திரவத்தை அலட்சியத்துடன் வழங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிறு கோளாறு ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதி்லாக, பிஞ்சு குழந்தைகளுக்கு கை கழுவும் சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

latest tamil news





இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார பணியாளர், மருத்துவர் மற்றும் ஆஷா பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
02-பிப்-202119:23:35 IST Report Abuse
Krishnamurthy Venkatesan பணியிடை நீக்கம் இதற்கு தீர்வு இல்லை. அவர்களை நிரந்தரமாக பணி நீக்குங்கள். குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்களுக்கு அவர்கள் எந்த அரசு ஊழியத்தில் நியமிக்க பட கூடாது.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
02-பிப்-202118:26:16 IST Report Abuse
vnatarajan பொறுப்பற்ற செயலுக்கு சுகாதார பணியாளர்களை பணியிடைநீக்கம் அல்ல பணிநீக்கம் செய்யவேண்டும் அல்லது சிறையில் தள்ளவேண்டும். தமிழ் நாட்டில் நடந்திருந்தால் ஸ்தாலினும் எதிர் கட்சிகளும் வாய் கிழிய கத்துவார்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-பிப்-202117:22:37 IST Report Abuse
J.V. Iyer உத்தவ் தாக்கரே பொறுப்பேற்கவேண்டும்.
Rate this:
Rajasekharan - Chennai,இந்தியா
02-பிப்-202120:32:14 IST Report Abuse
Rajasekharanமோடியும் சேர்த்து.. உத்தவ் தாக்கரேயை போல் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X