நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
வாஷிங்டன்: நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண்ணான பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. மேலும், பவ்யா லால், கடந்த 2005 முதல் 2020ம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி
IndianAmerican, BhavyaLal, NASA, Appointed, ActingChief, நாசா, இந்திய வம்சாவளி, பவ்யாலால்,

வாஷிங்டன்: நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண்ணான பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. மேலும், பவ்யா லால், கடந்த 2005 முதல் 2020ம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக பணியாற்றி வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் அளப்பரிய அனுபவங்களைக் கொண்டுள்ள பவ்யா லால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில், விண்வெளி தொழில்நுட்பம், கொள்கை உள்ளிட்ட துறைகளில் தலைமை பொறுப்பை வகித்து வந்துள்ளார்.

மேலும், அணுசக்தி பொறியியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை பிரிவில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar G - kuwait,குவைத்
02-பிப்-202123:28:35 IST Report Abuse
Shankar G இந்தியாவுக்கு என்ன பயன் ? 000
Rate this:
Cancel
02-பிப்-202122:28:58 IST Report Abuse
Ganesan Madurai பாரத்தில் செய்திக்கு பஞ்சமா? இல்லை, உருப்படியான செய்தி கிடைக்கவில்லையா? இதில் நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது? நமது நாட்டின் குடிமகளா அவர்? முட்டாத்தனமா அந்த நாடு தனது குடிமகளை எதுக்கோ எங்கயோ நியமித்தை நாம் சம்பந்தமிலாமல் கொண்டாடி அதை செய்தியாக வேறு போட்டு மகிழ வேண்டுமா?
Rate this:
Cancel
Hariharan - Kuwait,குவைத்
02-பிப்-202120:26:49 IST Report Abuse
Hariharan Brain drain caused by politicized, corruptive e based Reservation in india for higher education, Govt employment. She is an American. India at loss of talent if she had her education in our IITs and NITs
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X