சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 02, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குரைக்காத நாய்மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் காணப்படும் 'பசன்ஜி' என்ற நாய் இனங்கள், மற்ற நாய் இனங்களை போல குரைக்காது. காட்டுப்பகுதிகளில் செல்லும் போது நாய் குரைத்தால் எதிரிகளுக்கு இருப்பிடத்தை காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இவ்வகை நாய்களை வேண்டுமென்றே இப்படி இனப்பெருக்கம் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஒரு சிலர் 'பசன்ஜி' வகை நாய்கள் தான் உலகில்

அறிவியல் ஆயிரம்
குரைக்காத நாய்

மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் காணப்படும் 'பசன்ஜி' என்ற நாய் இனங்கள், மற்ற நாய் இனங்களை போல குரைக்காது. காட்டுப்பகுதிகளில் செல்லும் போது நாய் குரைத்தால் எதிரிகளுக்கு இருப்பிடத்தை காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இவ்வகை நாய்களை வேண்டுமென்றே இப்படி இனப்பெருக்கம் செய்திருப்பதாக கூறுகின்றனர். ஒரு சிலர் 'பசன்ஜி' வகை நாய்கள் தான் உலகில் பழமையான இனத்தை சேர்ந்தது என நம்புகின்றனர். இது வேட்டை நாயாகவும் திகழ்கிறது. இதன் உயரம் 43 செ.மீ., எடை 9.5 கிலோ இருக்கும். ஆயுட்காலம் 14 - 16 ஆண்டுகள்.

தகவல் சுரங்கம்
அதிக முறை 'பட்ஜெட்'

இந்தியாவின் நிதியமைச்சராக இதுவரை 28 பேர் பதவி வகித்துள்ளனர். இதில் 2 பேர் ஜனாதிபதியாகவும், 4 பேர் பிரதமராகவும் ஆகினர். அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய். இவர் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1958 - 1963, 1967 - 1969 என இருமுறை பதவி வகித்தார். இதில் அடுத்தடுத்த இடங்களில் சிதம்பரம் (9 முறை), பிரணாப் முகர்ஜி (8 முறை), யஷ்வந்த் சின்ஹா, யஷ்வந்த்ராவ் சவான், சி.டி.தேஷ்முக் (தலா 7 முறை), மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி (தலா 6 முறை) உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X