காங்., -அகாலி தளம் மோதல் சுக்பீர் பாதல் கார் நொறுங்கியது

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சண்டிகர் :பஞ்சாபில், காங்., - அகாலிதளம் கட்சியினர் இடையே நடந்த மோதலில், சுக்பீர் சிங் பாதல் எம்.பி.,யின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு எட்டு மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, சிரோமணி அகாலிதள தலைவரும், பிரோஸ்பூர் எம்.பி.,யுமான சுக்பீர் சிங் பாதல், தன்
காங்.,  அகாலி தளம்,சுக்பீர் பாதல் கார் நொறுங்கியது

சண்டிகர் :பஞ்சாபில், காங்., - அகாலிதளம் கட்சியினர் இடையே நடந்த மோதலில், சுக்பீர் சிங் பாதல் எம்.பி.,யின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு எட்டு மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, சிரோமணி அகாலிதள தலைவரும், பிரோஸ்பூர் எம்.பி.,யுமான சுக்பீர் சிங் பாதல், தன் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கலுக்காக, ஜலாலாபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.


latest tamil news


அப்போது, காங்., - எம்.எல்.ஏ., ரமிந்தர் அவ்லாவும், தன் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கலை பார்வையிட வந்தார். அப்போது இது தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பினரும், சரமாரியாக கற்களை வீசி தாக்கினார். சுக்பீர் சிங் பாதல் காரை தடுத்து நிறுத்தி, அடித்து நொறுக்கினர். அகாலி தள கட்சியினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த வன்முறையால், அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த மோதலில், சுக்பீர் சிங் பாதல், காயமின்றி தப்பினார். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman - chennai ,இந்தியா
03-பிப்-202112:27:17 IST Report Abuse
Sivaraman பிஜேபி தனித்து வேலையை ஆரம்பித்து பூத் கமிட்டி அமைத்து அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயார் ஆகி வருகிறது .
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
03-பிப்-202111:09:54 IST Report Abuse
Ramaraj P 20 ஏக்கருக்கு கீழே வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இந்த முறை பா ஜ க விற்குத்தான் ஓட்டு போட போகிறார்கள் பஞ்சாப் மாநிலத்தில். இந்த சட்டத்தின் பலன் என்ன என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.
Rate this:
Cancel
03-பிப்-202111:00:45 IST Report Abuse
ஆரூர் ரங் அகாலி இனி காலி. 9000 சக சீக்கியர்களை👹 வேட்டையாடிய காங்கிரசை நம்பி வெளியேறிய பாவம😡சும்மா விடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X