தமிழக மீனவர்கள் கொலை: இலங்கைக்கு மத்திய அரசு கண்டனம்

Updated : பிப் 03, 2021 | Added : பிப் 03, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என தெரிவித்துள்ளோம் என ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர்களை, 2020 டிச., முதல் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜன.,18ல் சென்ற மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்தது. இதில்
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை, ராஜ்யசபா, மாநிலங்களவை, திமுக, தி.மு.க., அதிமுக, அ.தி.மு.க., வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர், இலங்கை, கொலை

புதுடில்லி: தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என தெரிவித்துள்ளோம் என ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை, 2020 டிச., முதல் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜன.,18ல் சென்ற மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்தது. இதில் நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எழுப்பினர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ராஜ்யசபா இன்று கூடியதும், தமிழக எம்பிக்கள் மீனவர்கள் பிரச்னையை எழுப்பினர். சமீபத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டதற்கு அதிமுக எம்பி தம்பிதுரை கண்டனம் எழுப்பினார். இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால், தொழிலையே விட்டுவிடும் மனநிலையில் மீனவர்கள் இருப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா கூறினார். இந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் கூட்டாக குரல் கொடுத்தனர்.


latest tamil news



இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கொலை செய்யப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
03-பிப்-202122:19:43 IST Report Abuse
Thirumurugan தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் இல்லையா? குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கைது பண்ணும்பொழுது வடஇந்திய ஊடகங்கள் இந்திய மீனவர்கள் கைது என்றுதான் செய்தி போடுகிறார்கள், குஜராத் மீனவர்கள் கைது என்று போடுவதில்லை. ஆனால் இலங்கை அட்டூழியம் பண்ணும்போது அதை இந்திய மீனவர்கள் படுகொலை என்று சொல்வதில்லை ஆனால் தமிழக மீனவர்கள் இறப்பு என்று சொல்கிறார்கள். இது ஏன்?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
03-பிப்-202120:08:40 IST Report Abuse
spr தேர்தலை மனதில் வைத்து தமிழக அரசியல்வியாதிகளைத் திருப்தி செய்ய இது போல் பாஜகவும் நாடகமும் ஆட வேண்டாம் செல்வி செய்தது போல மீனவர்கள் அறியாமலே கடல் எல்லை தாண்டாமலிருக்க அவர்களுக்கு ஜி பி எஸ் வசதி அறிந்தே தாண்டினால், தடுக்க நம் கடற்படையை பாதுகாவலுக்கு நிற்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் இவர்களுக்குப் பின் இருப்பது நம் தமிழக (குறிப்பாக கழகக் கண்மணிகள்) அரசியல்வியாதிகள். அவர்களின் கட்டாயத்தால், காசு கிடைக்குமென்று எல்லை தூண்டுகிறார்கள் அதைத் தடுக்காத வரை இந்தப் பிரச்சினை அதிலும் மத்தியில் பாஜக அரசு இருக்கும்வரையில் அவர்களுக்குத் தலைவலி கொடுக்க இது மிகவும் பயன்படும் பிற இடங்களில் அவர்கள் மீன் பிடிக்க வழி செயகாலும் அவர்கள் ஏற்பதில்லை ஏதேனும் சட்டம்கொண்டு வந்து மீனவர்களை அந்தத் தொழிலை விட்டே விரட்டுவது கடைசி நிலை
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
03-பிப்-202119:43:28 IST Report Abuse
Raj பல போராட்டத்துக்கு பின்னர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X