சென்னை: பா.ஜ., எந்த மதத்திற்கும் எதிரான கட்சியல்ல எனக்கூறிய தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன், மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் இணையும் விழா நடைபெற்றது. அப்போது தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பா.ஜ., சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடத்தவுள்ளோம். தேர்தல் நேரம் என்பதால் இது தேர்தலுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால், தேர்தலுக்காக அல்லாமல் தமிழகத்தின் நலனுக்காக அதிக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்றவை பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளன.

நல்ல பட்ஜெட்டை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை. எந்த மதத்தையும், தனிநபரையும் கொச்சைப்படுத்த கூடாது. பா.ஜ., எந்த மதத்திற்கும் எதிரான கட்சியல்ல. மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE