அனைத்து திருடர்களும் பா.ஜ.,வில் சேருகின்றனர் : மம்தா கோபம்!

Updated : பிப் 03, 2021 | Added : பிப் 03, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
கொல்கத்தா: “அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பா.ஜ.,வில் இணைகின்றனர். அக்கட்சி திரிணாமுல் காங்கிரஸை வெல்லப்போவதாக கூறுகிறது. அது நிச்சயம் நடக்காது.” என மம்தா பானர்ஜி கோபத்துடன் கூறினார். மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் விலகி பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் அக்கட்சியில் மம்தா

கொல்கத்தா: “அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பா.ஜ.,வில் இணைகின்றனர். அக்கட்சி திரிணாமுல் காங்கிரஸை வெல்லப்போவதாக கூறுகிறது. அது நிச்சயம் நடக்காது.” என மம்தா பானர்ஜி கோபத்துடன் கூறினார்.



latest tamil news



மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் விலகி பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் அக்கட்சியில் மம்தா மட்டுமே எஞ்சியிருப்பார் என கடந்த வாரம் அமித்ஷா பேசினார். இது முதல்வர் மம்தாவை ஆத்திரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிணாமுல் ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்து தற்போது பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ரஜீப் பானர்ஜி மீதான ஊழல் புகாரை தூசி தட்டியுள்ளார். பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


latest tamil news



வடக்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: எனக்கு பலரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். அடுத்த மூன்று, நான்கு நாட்களில் தேர்தல்கள் அறிவிக்கப்படலாம். அப்போதும் விசாரணை தொடரும். அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பா.ஜ.,வில் இணைகிறார்கள். அவர்கள் திரிணாமுல் காங். கை தோற்கடிப்பார்கள் என்று கூறுகின்றனர். நீங்கள் ஒருபோதும் திரிணாமுல் காங். கை தோற்கடிக்க முடியாது. பா.ஜ., ஒரு வாஷிங் மெஷின். ஊழல் நிறைந்தவர்கள் அங்கு சேர்ந்து சுத்தமானவர்களாக வெளியே வருகிறார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
04-பிப்-202118:09:20 IST Report Abuse
vnatarajan உங்கள் கட்சியிலிருந்து விலகி பிஜேபி யில் சேர்ந்தால் அவர்களெல்லாம் திருடர்கள் ரவுடிகள்னு சொன்னால் அவங்களை ஏன் இதனை நாளும் உங்க காசியிலே ஏன் வச்சிருந்தீங்க பிஜேபி யை ஒரு சுத்த படுத்தும் வாஷிங் மெஷின்னு நீங்களே ஒத்துக்கறீங்க. அப்போ போகத்தான் செய்வாங்க .பேசாம நீங்களும் பிஜேபி யிலே சேர்ந்து சுத்தமாயிடறதுதானே.
Rate this:
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
04-பிப்-202115:59:36 IST Report Abuse
Shekar Raghavan சாராத சாராத சங்கூர் சாராத , எங்கயோ இடிக்குது, பெங்காலிகள் பொல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்பினால் அனுப்பியது தான் பை பை அக்கா
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-பிப்-202114:01:24 IST Report Abuse
Anand இந்தம்மா அவர்களின் தலைவியாக இருந்தாரே, தலைவி எப்படியோ தொண்டனும் அப்படிதான், அதாவது திருட்டு கும்பலின் தலைவி, என கூறலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X