பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம்:கருத்து தெரிவித்த அவசரக் குடுக்கைகள்

Updated : பிப் 05, 2021 | Added : பிப் 03, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி : விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்து வரும், விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். 'விஷயம் தெரியாமல் பேச வேண்டாம்; கிளர்ச்சியை துாண்டும் வகையில் செயல்பட வேண்டாம்' என, மத்திய அரசு அவர்களுக்கு குட்டு வைத்துள்ளது.விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து,
Farmers Protest, Rihanna, twitter, விவசாயிகள் போராட்டம், மத்திய அரசு, குட்டு

புதுடில்லி : விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்து வரும், விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். 'விஷயம் தெரியாமல் பேச வேண்டாம்; கிளர்ச்சியை துாண்டும் வகையில் செயல்பட வேண்டாம்' என, மத்திய அரசு அவர்களுக்கு குட்டு வைத்துள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்தப் போராட்டத்துக்கு, சில அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பாப் பாடகி ரிஹானா, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அவரை, 10 கோடி பேர் பின்தொடர்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும், டில்லி எல்லையில், இன்டர்நெட் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒரு செய்தியை மேற்கோள்காட்டி, 'இது குறித்து ஏன் நாம் பேசுவதில்லை' என, ரிஹானா குறிப்பிட்டார்.


கருத்து


அவரைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை அமந்தா செர்னி. அமெரிக்க துணை அதிபரான, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிசின் தங்கை மகள், மீனா ஹாரிஸ் உள்ளிட்டோரும், சமூக வலை தளங்களில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, நம் வெளியுறவு அமைச்சகம், நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட விவாதம் நடத்தப்பட்ட பின்னே, விவசாய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டம் குறித்து, நாட்டின் சில குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் தான் பிரச்னை எழுப்பியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, சில சுயநலவாதிகள் பெரிய அளவில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.இவர்களை போன்ற சுயநலவாதிகள், தங்களுடைய கருத்துக்கள், விருப்பங்களை, விவசாயிகள் மீது திணித்து, போராட்டம் தொடர்ந்து நடைபெற வைத்து வருகின்றனர்.

ஒரு பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கும் முன், அதன் பின்னணி என்ன, அதில் உள்ள உண்மையான பிரச்னை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில், நீண்ட விவாதங்களை நடத்துவதற்காகவும், உணர்ச்சிகளை துாண்டும் வகையிலும், 'ஹேஸ்டேக்'குகளை சிலர் பதிவிட்டு வருகின்றனர். அவை பெரும்பாலும் உண்மையாகவோ, பொறுப்பான செயலாகவோ இருப்பதில்லை. அதனால், அதில் கருத்து தெரிவிக்கும் முன், அவை குறித்து பிரபலங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது,

நம் நாட்டில் ஜனநாயகம் பின்பற்றப்படுகிறது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது. ஆனால், சில சுயநலவாதிகள்,சர்வதேச அளவில் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை போன்றவர்களின் குறுகிய மனப்பாங்கினால் தான், அமெரிக்காவில், மஹாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள நாகரிக சமூகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டக்காரர்களின் கோரிக்கையை மதித்து, அவர்களுடன், மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு, 11 சுற்று பேச்சு நடத்தியுள்ளது. தேவைப்பட்டால், தற்காலிகமாக, 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைப்பதாக, நாட்டின் பிரதமரே கூறியுள்ளார்.


சமூக அந்தஸ்து


விவசாயிகள் போராட்டம் துரதிருஷ்டவசமானது. ஆனால், சில சுயநலவாதிகள், தங்களுடைய விருப்பங்களை, விவசாயிகள் மீது திணித்துள்ளனர். நாட்டின் குடியரசு தினத்தில் நடந்த வன்முறையே இதற்கு உதாரணம்.இந்த வன்முறையின்போது, 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். அதில் பலர் கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது தான், இந்த விவசாய சட்டங்கள். இதன் மூலம், அவர்களுடைய வருமானம் உயர்வதுடன், சமூக அந்தஸ்தும் உயரும்.ஆனால், சில சுயநலவாதிகள் தவறாக கூறி, துாண்டிவிட்டு, போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதனால், முழு விபரம் தெரியாமல், கருத்து தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பாலிவுட் ஆதரவு


விவசாய சட்டங்கள் தொடர்பாக, ரிஹானா, கிரேட்டா கருத்து தெரிவித்துள்ள நிலையில், 'இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் நடக்கிறது' என, பாலிவுட் பிரபலங்கள், அக் ஷய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, கரன் ஜோகர் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.சமூக வலைதளங்களில், 'இந்தியா ஒன்றுபட்டுள்ளது; இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம்' என்ற பெயர்களில், 'ஹேஷ்டேக்'குகளும் வேகமாக பரவி வருகின்றன. 'இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டாம்' என, சமூக வலை தளங்களில் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த ஹேஷ்டேக்கை வைத்து, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் சமூக வலை தளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.நடிகர்கள், அக் ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் விவசாயிகளுக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளது. அவர்களுடைய போராட்டங்களுக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சி நடந்து வருகிறது. சுமுகமான தீர்வு ஏற்பட அனைவரும் ஆதரிப்போம். மக்களிடையே பிரிவை, பிளவை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டாம். இந்தியா ஒன்றுபட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் பொய் பிரசாரத்தை முறியடிப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


'டுவிட்டரு'க்கு எச்சரிக்கை


'டுவிட்டர்' சமூக வலைதள அமைப்புக்கு, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் அமைதிக்கு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, இனப்படுகொலை நடப்பதாக, டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ள, 250க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.ஆனால், முடக்கிய சில மணி நேரங்களிலேயே, அவை, திரும்ப பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், கடும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


நடிகையர் ஆதரவு


விவசாயிகள் போராட்டம் குறித்து, பாப் பாடகி, ரிஹானா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பாலிவுட் நடிகையர் சிலர் ஆதரவு தெரிவித்து, செய்தி வெளியிட்டுள்ளனர். நடிகையர், ரிச்சா சட்டா, ஸ்வரா பாஸ்கர் ஆகியோர், ரிஹானாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 'பாலிவுட்டைச் சேர்ந்த ஒரு சிலரே, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொஞ்சம் முதுகெலும்பை வளர்த்துக் கொள்ளுங்கள்' என, நடிகை சாயானி குப்தா, செய்தி வெளியிட்டுள்ளார்.


சர்ச்சையில் கங்கனா


பாப் பாடகி, ரிஹானாவின் பதிவுக்கு பதிலளித்து, பிரபல பாலிவுட் நடிகை, கங்கனா ரணாவத் வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.'ஏன் யாரும் பேசுவதில்லை' என, ரிஹானா பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்து, சமூக வலைதளத்தில், கங்கனா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தப் பிரச்னை குறித்து ஏன், யாரும் பேசுவதில்லை என்றால், அவர்கள் விவசாயிகள் அல்ல; பயங்கரவாதிகள். அவர்கள் இந்தியாவை பிளவு படுத்த முயற்சிக்கிறார்கள். அப்போது தான், உடையும் இந்தியாவை, சீனா கைப்பற்ற முடியும். அமெரிக்காவைப் போல், இந்தியாவையும், சீனாவின் காலனியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

ஆனால், உங்களை போல நாங்கள், இந்தியாவை விற்க விரும்பவில்லை; முட்டாளே, பேசாமல் இரு.இவ்வாறு அவர், கடுமையாக குறிப்பிட்டிருந்தார். அதில், விவசாயிகளை, பயங்கரவாதிகள் என்று அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-பிப்-202121:18:20 IST Report Abuse
ஆப்பு அப்கே பார் பார் ட்ரம்ப் சர்க்கார்னு அமெரிக்காவுல முழங்கிய போது எங்கே போனார்கள் இந்தக் கூத்தாடிகள்?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-பிப்-202118:30:13 IST Report Abuse
Sridhar ரிஹான்னா சொன்னது இன்டர்நெட் நிறுத்தம் பற்றித்தான். அவருக்கு போராட்டத்தை பற்றியோ நம் சட்டங்களை பற்றியோ விவரங்கள் தெரியாது. ஆனால், என்ன நடந்தாலும் இன்டர்நெட் எனும் அடிப்படை உரிமை பறிக்கப்படக்கூடாது எனும் நோக்கில் அவர் அதை பற்றித்தான் கருத்து சொல்லியிருக்கிறார். அது தவறாக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு போல் திரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், க்ரெடா போன்றவர்கள் ஆதரவு தெரிவிப்பதோடு நிற்காமல் நம் நாட்டுக்கு எதிராக மிக பெரிய சதி வேலைகளில் ஈடுபட்டிருப்பது அவர் மூலமாகவே வெளிவந்திருக்கிறது. இவ்வளவு நாள் பூடகமாக சந்தேகப்பட்ட விஷயம் நிரூபணமாயிருக்கிறது. உண்மையாகவே சில எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு உதவியுடன் மோடி அரசை கவிழ்க்கவேண்டும் என்ற உந்துதலில் நாட்டுக்கு எதிராகவே செயல்பட துவங்கிவிட்டன. ராவுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குத்தான் என்ற உண்மை இப்போது ஊர்ஜிதமாகிறது.
Rate this:
Cancel
Chandran - beijing,இந்தியா
04-பிப்-202117:48:15 IST Report Abuse
Chandran உங்களுக்கு பேசுபூக் ஆதரவு கொடுக்கவில்லை என்று எவ்வளவு கோபம் வந்தது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை கூப்பிட்டு டார்ச்சர் செய்த்த்ர்களே. நம் இந்திய தேசத்தினை பிளவு செய்யும் எந்த செயலையும் தடை செய்வதில் தப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X