புதுடில்லி:குடியரசு தினத்தன்று, டில்லியில் நடந்த கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்கள் மீது, தேச துரோக வழக்கு உட்பட, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு, ராஜ்யசபாவில் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
குடியரசு தினத்தன்று, டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. பொய்யான தகவல்அப்போது, டிராக்டர் கவிழ்ந்ததில், விவசாயி ஒருவர் பலியானார். முன்னதாக, போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாக, பொய்யான தகவல் பரப்பப்பட்டன.காங்.,கைச் சேர்ந்த எம்.பி., சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட ஆறு பேர், தங்கள், 'டுவிட்டர்' பக்கத்தில் பொய்யான தகவல்களை பரப்பி கலவரத்தை துாண்டிவிட்டதாக, பல்வேறு மாநிலங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, காங்., எம்.பி.,யும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங், ராஜ்யசபாவில் பேசியதாவது:சசி தரூர் மற்றும் ஆறு பத்திரிகையாளர்கள் மீது, தேச துரோகம், மக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
டில்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா உட்பட, ஐந்து மாநிலங்களில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.திட்டமிட்டு பதிவுபத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதற்காகவே, இதுபோன்ற வழக்குகள் திட்டமிட்டு பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, எம்.பி., சசி தரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE