அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நல்லா கல்லா கட்டுறாங்கப்பா!'

Updated : பிப் 05, 2021 | Added : பிப் 03, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
நடிகர் ரஜினி, அரசியலுக்கு வராத நிலையில், அவரது ரசிகர்கள், கட்சி தாவல் வாயிலாக, 'கல்லா' கட்டத் துவங்கி உள்ளனர்.தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, உடல் நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வராமல் ஒதுங்கி விட்டார்.'மக்கள் மன்றம் எப்போதும் போல செயல்படும். விருப்பப்படும் நபர்கள், எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேருங்கள்.
நடிகர் ரஜினி, திமுக, அரசியல்

நடிகர் ரஜினி, அரசியலுக்கு வராத நிலையில், அவரது ரசிகர்கள், கட்சி தாவல் வாயிலாக, 'கல்லா' கட்டத் துவங்கி உள்ளனர்.

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, உடல் நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வராமல் ஒதுங்கி விட்டார்.'மக்கள் மன்றம் எப்போதும் போல செயல்படும். விருப்பப்படும் நபர்கள், எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேருங்கள். ஆனால், போகும் முன், மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விடுங்கள்' என, ரஜினி கூறியிருந்தார்.ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நினைப்பில், பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த ரஜினி ரசிகர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில், மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

அதுபோன்றவர்களை, தங்கள் பக்கம் இழுக்க, பல்வேறு கட்சிகளும், முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதில், தி.மு.க., முந்திச் செல்ல, அ.தி.மு.க.,வும், தன் பங்கிற்கு ரஜினி ரசிகர்களை இழுத்து வருகிறது.வடசென்னை மாவட்ட மகளிரணி செயலர், நேற்று முன்தினம், தன் ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணைந்தார். இந்நிலையில், தென் சென்னை தெற்கு மற்றும் மேற்கு பகுதி ரஜினி ரசிகர்கள், 200 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.
'தங்கள் கட்சியில் சேரும், ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளுக்கு, பலத்த கவனிப்பும், தேவைப்பட்டால் பதவியும் தரப்படும்' என, கட்சிகள் சார்பில், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுஉள்ளது.

இதனால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து பலரும், கவனிக்கும் கட்சிகளுக்கு தாவ, நாள் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.இதுபோன்றவர்கள், ரஜினி கட்சியில் இருந்திருந்தால், ரஜினி நினைத்த அரசியல் மாற்றத்தை தந்திருக்க முடியாது என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, மார்ச் முதல் வாரம் வரை, ரஜினியின் மாற்று முடிவுக்காக, ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் சிலர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

- -நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
09-பிப்-202106:24:51 IST Report Abuse
Indhuindian அதுலே என்ன தப்பு இவங்களை வெச்சி அரசியலுக்கு வரேன் வரேன்னு சொல்லி படத்தை ஒட்டி இவங்க தலைவர் கல்லா கட்டலையா இவங்க என்ன பண்ணுவாங்க இத்தனை நாளா பால் அபிஷேகமும், போஸ்டரும், தேங்காயும் வொடச்ச காச எப்ப திரும்ப எடுக்கறது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் இல்லையா
Rate this:
Cancel
06-பிப்-202102:23:15 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) மிஸ்டர் டுபாக்கூர்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05-பிப்-202121:16:15 IST Report Abuse
N Annamalai இவர் எடுத்த முடிவு மிக சரியானதே .அவர் நலமுடன் வாழட்டும் .மரங்கள் நாட மக்களை ஊக்குவிக்கட்டும் .டாஸ்மாக் கடை வாசலில் கிடப்பவர்களை உழைக்க சொல்லட்டும் .படிப்பவர்களை மேலும் சிரத்தையுடன் படிக்க சொல்லட்டும் .மக்களை ஊக்குவிக்கலாம் .பணம் தேவை இல்லை .அவர் நினைத்தால் செய்யலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X