பொது செய்தி

தமிழ்நாடு

பசிக்கிறதா... ப்ரீயா பிரியாணி சாப்பிடுங்க! ஏழைகளின் பசியாற்றுகிறார் சபிரீனா

Added : பிப் 04, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோவை : ''பசிக்கிறதா... வாங்க வந்து பிரியாணி சாப்பிடுங்க'' என, பிரியாணி தானம் செய்கிறார் கோவையில் ஒரு பெண்.கோவை புலியகுளம் ரெட்பீல்டு ரோடு பகுதியில், வசித்து வருபவர் சபிரீனா சதீஸ். இவர் தனது கடையில் ஒரு பிளேட் பிரியாணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.''என்னது... 20 ரூபாய்க்கு பிரியாணியா...''என, ஆச்சரியப்பட வேண்டாம். பாக்கெட்டில் பணம் இருப்பவர்கள், 20 ரூபாய் கொடுத்து
பசிக்கிறதா... ப்ரீயா பிரியாணி சாப்பிடுங்க! ஏழைகளின் பசியாற்றுகிறார் சபிரீனா

கோவை : ''பசிக்கிறதா... வாங்க வந்து பிரியாணி சாப்பிடுங்க'' என, பிரியாணி தானம் செய்கிறார் கோவையில் ஒரு பெண்.

கோவை புலியகுளம் ரெட்பீல்டு ரோடு பகுதியில், வசித்து வருபவர் சபிரீனா சதீஸ். இவர் தனது கடையில் ஒரு பிளேட் பிரியாணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.''என்னது... 20 ரூபாய்க்கு பிரியாணியா...''என, ஆச்சரியப்பட வேண்டாம். பாக்கெட்டில் பணம் இருப்பவர்கள், 20 ரூபாய் கொடுத்து பிரியாணி சாப்பிடலாம். இல்லை என்றால் வயிற்றில் பசி இருந்தால் போதும்; இங்குஇலவசமாக பிரியாணி சாப்பிடலாம்!

இவரது கடையில் ஒரு ஓரத்தில் உள்ள, அட்டை பெட்டியில் பிரியாணி பொட்டலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 'பசிக்கிறதா எடுத்துக்கோங்க' என, ஒரு போர்டு எழுதி வைக்கப்பட்டு உள்ளது.அந்த வழியாக பசியில் செல்லும் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் பெட்டியில் இருக்கும் பிரியாணி பொட்டலத்தை, இலவசமாக எடுத்து சாப்பிட்டு செல்கின்றனர்.

''தயிர் சாதமே ஒரு பொட்டலம், 30 ரூபாய்க்கு விற்கப்படும் போது, உங்களால் எப்படி, 20 பிரியாணி கொடுக்க முடிகிறது. அதிலும் இலவசமாகவும் கொடுக்கிறீர்கள், இது எப்படி சாத்தியமாகிறது...,?'' என, சபிரீனாவிடம் கேட்டோம்.

''இந்த கடையை வைத்து வியாபாரம் செய்து, லாபம்சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நடத்தவில்லை. பசித்தவர்களுக்கு தினமும், 100 பேருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, நானும் என் கணவரும் நடத்துகிறோம். பணம் இருப்பவர்கள், 20 ரூபாய் கொடுத்து சாப்பிடுகின்றனர். இல்லாதவர்கள் இலவசமாக சாப்பிடுகின்றனர்.

எங்களுக்கு லாபம் வேண்டாம். மறுநாள் உணவு தயாரிக்க சமையல் பொருட்கள் வாங்க, பணம் கிடைத்தால் போதும்.பசியோடு வருபவர்கள் பகல் 12:00 முதல் 3:00 மணி வரை இங்கு உணவு சாப்பிடலாம். வியாபாரம் நன்றாக இருந்தால், 15 ரூபாய்க்கு பிரியாணி கொடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்,'' என்கிறார் சபிரீனா. வயிற்றுப்பசி போக்கும் இவர்களைப் போன்றோர்தான் வாழணும் பல்லாண்டு!

ஆசை யாரை விட்டது!

ஆதரவற்றவர்கள் மற்றும் ஒரு வேளை சாப்பிட வழியில்லாதவர்கள் பசியாற, வைக்கப்பட்டு உள்ள இந்த பிரியாணி பொட்டலங்களை, இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், அக்கம் பக்கம் இருப்பவர்கள், மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்கள் என, பல பேர் எடுத்து செல்கின்றனர்.ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர், பிரியாணி பொட்டலத்தை எடுத்து கொண்டு போவதை பார்க்க முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naath - humberg,ஜெர்மனி
08-பிப்-202110:37:33 IST Report Abuse
naath கடவுளின் அருள் என்றைக்கும் இவர்களை போன்ற நல்லவர்களுக்கு கிடைக்க வேணும்.
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
04-பிப்-202121:57:18 IST Report Abuse
mrsethuraman  'ப்ரீ 'யானி.வசதி படைத்தவர்களும் எடுத்து செல்வது ஏழையின் வீட்டிலிருந்து திருடுவதற்கு சமம் .
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-பிப்-202120:03:43 IST Report Abuse
தமிழவேல் பாராட்டுகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X