பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம்: வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு

Updated : பிப் 04, 2021 | Added : பிப் 04, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
மும்பை: டில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்து வரும், விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சச்சின்
Farmers Protest, Sachin, Sachin Tendulkar

மும்பை: டில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விவசாய சட்டங்களை எதிர்த்து நடந்து வரும், விவசாயிகள் போராட்டம் குறித்து, பிரபல பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்து கொள்ள முடியாது. உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம்; பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி உள்ளது. இதேபோல், மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, அனில் கும்ளே உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


விராட் கோஹ்லி:

கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்; நம் நாட்டின் கட்டமைப்பே விவசாயிகள் தான். அமைதியைக் கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் இடையில் ஒரு இணக்கமான தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.



சுரேஷ் ரெய்னா:

ஒரு நாடாக நமக்கு இன்றைக்கு தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கின்றன. நாளையும் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் இருக்கும்; அதற்கு நாம் ஒரு பிரிவை ஏற்படுத்துகிறோம் அல்லது வெளிப்புற சக்திகளால் குழப்பமடைகிறோம் என்று அர்த்தமாகாது; எல்லாவற்றையும் இணக்கமான மற்றும் பாரபட்சமற்ற பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ppmkoilraj - erode.10,இந்தியா
05-பிப்-202108:01:37 IST Report Abuse
ppmkoilraj விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் என்றெல்லாம் திசைதிருப்ப பட்டாலும் உண்மையிலேயே காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இருந்தாலும் அதை முறியடித்து பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவது மத்திய அரசினுடைய கடமை. இது முடியாவிட்டால் ராஜினமா செய்து போவதுதான் தர்மம் .கடவுள் பக்தி தங்களுக்குத்தான் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் பாஜக அரசு மக்கள் படும் வேதனைகளை நீக்க மூன்று சட்டங்களை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்வதைவிட ரத்து செய்கிறோம் என்று சொல்வதுதான் மேல் உடனேபிரதமர் மோடி இதை செய்வாரா?
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
05-பிப்-202101:16:34 IST Report Abuse
Murthy பணம் மட்டும் வெளிநாட்டில் இருந்து வேணும்.........
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
05-பிப்-202101:15:45 IST Report Abuse
Murthy அப்ப உள்ளூரில் மட்டும் கிரிக்கெட் விளையாடலாம்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X