சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காருண்யா நகர்' பெயருக்கு எதிர்ப்பு : நல்லூர்வயலில் கண்டன பேரணி

Updated : பிப் 04, 2021 | Added : பிப் 04, 2021 | கருத்துகள் (163)
Share
Advertisement
கோவை: கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என மாற்றியதை கண்டித்து, நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது.மத போதகர் பால் தினகரன் நடத்தும், காருண்யா கல்வி நிறுவனங்கள், 'ஏசு அழைக்கிறார்' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கோவை நல்லுார்வயல் கிராமத்தில் செயல்படுகின்றன. கடந்த மாதம், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில், பால் தினகரனுக்கு சொந்தமான
காருண்யா நகர், நல்லூர்வயல், கண்டன_பேரணி, பால் தினகரன்,

கோவை: கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என மாற்றியதை கண்டித்து, நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது.

மத போதகர் பால் தினகரன் நடத்தும், காருண்யா கல்வி நிறுவனங்கள், 'ஏசு அழைக்கிறார்' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கோவை நல்லுார்வயல் கிராமத்தில் செயல்படுகின்றன. கடந்த மாதம், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில், பால் தினகரனுக்கு சொந்தமான நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இந்நிலையில், நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, 'காருண்யா நகர்' என மாற்றியதாக காருண்யா நிர்வாகம் மீது புகார் எழுந்தது. நல்லுார்வயல் தபால் நிலையமாக இருந்ததை, 1995ல், 'காருண்யா நகர்' தபால் நிலையமாக மாற்றினர்.அதேபோல், 'காருண்யா காவல் நிலையம், காருண்யா டெலிபோன் எக்சேஞ்ச்' என, அரசு நிறுவனங்களின் பெயர்களும் மாற்றப்பட்டதாக, அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.


நல்லூர்வயல் என மாற்றக்கோரி பேரணி

latest tamil news

கிராமத்தின் பெயரையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்க, கிராம மக்கள், 'நல்லுார் வயல் பாதுகாப்பு குழு' என்ற அமைப்பை துவக்கினர். நேற்று மாலை, ஆலாந்துறை பகுதியில் கண்டன பேரணி நடத்தினர். மத்வராயபுரத்தில் திரண்ட மக்கள், நல்லுார்வயல் நோக்கி சென்றபோது, போலீசார் தடுத்து கைது செய்தனர்.

நல்லுார் வயல் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில், 'நல்லுார் வயல் கிராமத்தின் பெயரை, காருண்யா நகர் என மாற்றியுள்ளனர். இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்களும், காருண்யா நகர் என மாற்றப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தின் பெயரை மாற்றுவது, அந்த கிராமத்தை அழிப்பதற்கு சமம்.'கிராமத்தின் கலாசாரம், வாழ்க்கை முறை புதைக்கப்படும். காருண்யா நகர் என்ற பெயரை மீண்டும் நல்லுார் வயல் என மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நல்லுார் வயல் என, அரசு அலுவலகங்கள் மற்றும் பஸ்களில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.


தீர்மானம் நிறைவேற்றம்


மத்வராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும், 'காருண்யா நகர்' என்ற பெயரை மாற்றி, நல்லுார் வயல் என, மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமம் துவங்கும் இடத்தில், நல்லுார் வயல் கிராமத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-பிப்-202111:29:28 IST Report Abuse
Matt P நல்லூர் வயல் என்ற பெயர். ..நல்ல தமிழ் பெயர்கல் அருகி வரும் நிலையில் அழகான தமிழ் பெயர் ..காருண்யா என்பதும் மொழிக்கு எதிரானது அல்ல. காருண்யா என்றால் கருணை . ஜீவ காருண்யா என்றால் உயிர்களிடம் கருணை காட்டுதல்.குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் தன்னலத்தோடு ஒரு நல்ல தமிழ் பெயரை மழுங்கடிக்க முயற்சித்தது ஏற்புடையதல்ல.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
06-பிப்-202120:23:17 IST Report Abuse
Sathya Dhara வெளிநாட்டினில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு...நமது பாரத கலாச்சாரத்தினை அழிக்க வந்த ஹிந்து துரோகிகள். கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இனியும் பாவாடைகள் ஏமாற இங்கு யாரும் தயாராக இல்லை....
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
05-பிப்-202107:19:51 IST Report Abuse
svs //...கும்புடுறேன் சாமி .... பொதுவா வீரமா முனிவர் நகர்ன்னு ...//....இந்த தி மு க காரன் நடு நிலைனு ஏதாவது போலித்தனமாக செய்து ஆட்சிக்கு வரலாம்னு நினைத்தால் அது பகல் கனவு ...உள்ளதும் தொலைந்து கட்சி காணாமல் போகும் ..... கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியா வந்தவர் இந்த வீரமா முனிவர்...இவனுங்க செய்ததெல்லாம் அன்னை மேரியை , புனித பெரியநாயகி அன்னை என்று பெயர் மாற்றம் செய்து , புடவை உடுத்தி இங்குள்ள மக்களை மத மாற்றம் செய்வது....தமிழன்தான் அடுத்தவனுக்கு கத்து கொடுப்பான் ...அடுத்தவன் வெள்ளைக்காரன் எவனும் தமிழனுக்கு தமிழ் கத்து கொடுக்க தேவையில்லை .....
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-பிப்-202111:38:19 IST Report Abuse
Matt Pஅன்னை மரியாவுக்கு புடவை உடுத்தி அப்படியே திருநீறும் பூசி கையில சூலாயுதாய் கொடுத்தா இன்னும் நல்லாயிருக்கும். 2பேரும் ஒரே மாதிரி தான் தெரிவாங்க. மாரி அம்மன் தான் மேரி அம்மன் னு சொல்லலாமே....
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
05-பிப்-202107:13:45 IST Report Abuse
S.kausalya எந்த ஒரு தீய செயல்பாட்டையும் ஆரம்பிக்கும்போதே எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு வெளி ஊர் காரன் நம் ஊருக்கு வந்து நிலம் வாங்க ஆரம்பிக்கும் போதே அதை எதிர்த்து இருக்க வேண்டும். கிராம மக்களின் பண ஆசையை துாண்டி விட்டு நிலம் வாங்கும் போது கூட மக்கள் விவசாயம் செய்ய, தொழில் தொடங்க என்று தான் நினைத்து இருப்பார்கள். ஆனால் கல்வி கூடம் தொடங்க என்று சொல்லி ஆரம்பித்து மத மாற்றம், தன் மதத்தை பரப்ப, church கட்ட எண்ணும்போதாவது மக்கள் எதிர்த்து இருக்க வேண்டும். இத்தனை வருடத்தில் அரசாங்க துறையின் பெயரையே மாற்றும் வரை மக்கள் ஏன் பேசாமல் இருந்தார்கள்.? எனினும் இப்போதாவது முழித்து கொண்டார்களே, பாராட்டுக்கள். மத சார்பின்மை என்பது அரசியல் வாதிகளின் மந்திரம். காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வார்கள். ஆனால் நம் சொந்த மண்ணின் பெருமை அழிகிறது என்றால் அதன் சொந்த மக்கள் தான் போராட வேண்டும். வெற்றியுற வாழ்த்துக்கள்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-பிப்-202111:48:52 IST Report Abuse
Matt Pபணத்துக்கு ஆசைப்பட்ட ஆட்சியின் கீழ் உள்ள அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் [பெயர் மாற்றம் ஏற்பட...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X