இந்திய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு

Updated : பிப் 04, 2021 | Added : பிப் 04, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பாப் ஸ்டார் ரிஹானாவின் கருத்துக்கள் பரவலாக விவாதத்தை கிளப்பியுள்ளன. இதன் பின்னணியில் அமெரிக்காவின் கருத்துக்கள் வந்துள்ளன. பொதுவாக, இந்திய
FarmLaws, ImproveEfficiency, US, India PeacefulProtests, வேளாண் சட்டங்கள், அமெரிக்கா, பாராட்டு, இந்தியா

வாஷிங்டன்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து பாப் ஸ்டார் ரிஹானாவின் கருத்துக்கள் பரவலாக விவாதத்தை கிளப்பியுள்ளன. இதன் பின்னணியில் அமெரிக்காவின் கருத்துக்கள் வந்துள்ளன. பொதுவாக, இந்திய சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கை மற்றும் அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது என கூறியுள்ளது. இது வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை குறிப்பதாகும்.


இந்திய சந்தைகள் மேம்படும் என கருத்து

latest tamil news




அதே சமயம் அமைதியான முறையில் போராடுவதையும் ஆதரிப்பதாக கூறியுள்ளது. “அமைதியான ஆர்ப்பாட்டங்கள் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் அடையாளம் என்பதை உணர்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமும் அதையே கூறியுள்ளது. கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” என தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
04-பிப்-202120:42:44 IST Report Abuse
Rajagopal அதே அமெரிக்கர்கள் தங்களது அரசின் தலைமைகத்தில் குண்டர்கள் தாக்கிய போது அவர்களை பிடித்து உள்ளே தள்ளியுள்ளது. குடியரசு தினத்தன்று இந்தியக் கோடியை அவமதித்தவர்கள் எப்படி அமைதிப்போராட்டம் நடத்தியவர்கள் என்று இவர்கள் சொல்லலாம்?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-202116:44:26 IST Report Abuse
Janarthanan இதை கண்டித்து பிடன் ஒரு கடித்தை தட்டி விட சொல்லுங்க பா நம்ம ஊரில் இருந்து தமிழில் கடிதம் அனுப்பிய பார்ட்டி இடம் ???? பிடன் ரசிகர் மன்றம் என்னப்பா இது ???
Rate this:
Cancel
04-பிப்-202115:52:27 IST Report Abuse
ஆப்பு அமெரிக்க கார்ப்பரேட்கள் இந்தியாவுல நேரடியா நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம்னு மசோதா வந்தாலும் வரும். வருமானம் ரெட்டிப்பாகணுமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X