சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 04, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பறக்கும் 'ரேஸ்' கார்உலகில் முதன்முதலாக பறக்கும் வகையிலான 'ரேஸ்' காரை ஆஸ்திரேலிய நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் செல்லும். இதன் பெயர் 'ஏர்ஸ்பீடர்'. இது செங்குத்தாக புறப்பட்டு, செங்குத்தாகவே தரையிறங்கும். 2022ம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்கேற்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 96 கிலோவாட் மின்சக்தி திறன்

அறிவியல் ஆயிரம்
பறக்கும் 'ரேஸ்' கார்

உலகில் முதன்முதலாக பறக்கும் வகையிலான 'ரேஸ்' காரை ஆஸ்திரேலிய நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் செல்லும். இதன் பெயர் 'ஏர்ஸ்பீடர்'. இது செங்குத்தாக புறப்பட்டு, செங்குத்தாகவே தரையிறங்கும். 2022ம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்கேற்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 96 கிலோவாட் மின்சக்தி திறன் உள்ளது. இதன் எடை பைலட் இல்லாமல் 120 கிலோ. 'பார்முலா - 1' கார் போல இதை வளைத்து இயக்கலாம். மூன்று ஆண்டுகள் தயாரிப்புக்குப்பின் இது அறிமுகமாகியுள்ளது.

தகவல் சுரங்கம்
பட்டினி இல்லா உலகம்

ஐ.நா., சபையின் துணை அமைப்புகளில் ஒன்று உணவு மற்றும் விவசாய கழகம். உலகில் பட்டினியை போக்குவது, ஊட்டசத்தை அதிகரிப்பது மற்றும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கம். இது 1945 அக்., 16ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் இத்தாலியின் ரோம். இதன் உறுப்பினர்களாக 130 நாடுகள் உள்ளன. பல்வேறு நாடுகளில் இதன் கிளை அலுவலகம் உள்ளது. உலகளவில் வனம், மீன், விவசாயம், நிலம் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுகிறது. விவசாய உற்பத்தி ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X