கோர்ட் செய்தி

தமிழ்நாடு

7 பேர் விடுதலை: ஜனாதிபதி முடிவு செய்வார் என தமிழக கவர்னர் பதில்

Updated : பிப் 06, 2021 | Added : பிப் 04, 2021 | கருத்துகள் (18+ 23)
Share
Advertisement
புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் ஜனாதிபதி முடிவு செய்வார் என தமிழக கவர்னர் பதிலளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கட்சிகள்
ராஜிவ் கொலையாளிகள், விடுதலை, ஜனாதிபதி முடிவு, கவர்னர்

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் ஜனாதிபதி முடிவு செய்வார் என தமிழக கவர்னர் பதிலளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை காலம் முடியும் முன்பே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.அவர்களை விடுதலை செய்ய 2014 பிப்ரவரியில் ஜெ. முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. ஆதரவு பெற்ற காங். அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விடுதலை செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் மீண்டும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 2018 செப்.9ல் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால் கவர்னர் இதுவரை முடிவெடுக்கவில்லை. பரோலில் வந்த பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேரறிவாளன் தன்னை முன்னதாகவே விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப். 9ல் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனு:பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை முன்னதாகவே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தீவிரமாக ஆராய்ந்து தன் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜன.25ல் அனுப்பியுள்ளார்.அதில் 'பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு செய்வதே உகந்ததாக இருக்கும். இது தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்' என கூறப்பட்டுள்ளது.இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05-பிப்-202111:08:17 IST Report Abuse
நக்கீரன் ஒரு முக்கியமாக விவகாரத்தில் முடிவெடுப்பதில் அரசுகள் எப்படி நடந்துகொள்கின்றன என்பதற்கு இந்த 7 பேர் விடுதலை ஒரு முக்கியமான சாட்சி. மத்திய அரசு கவர்னரை கைகாட்டுகிறது. ஆனால், கவர்னரோ தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தை கடந்த 2 வருடங்களுக்கு மேல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். உச்சா நீதிமன்றத்தின் தலையீடு வந்ததும் தன்னிடம் அதிகாரம் இல்லை என்கிறார். மீண்டும் குடியரசு தலைவரை காட்டுகிறார். இதை சொல்வதற்கு இரண்டு வருடங்களா? மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே வந்திருக்கிறது இந்த விஷயம். இன்னும் எத்தனை வருடங்களாகுமோ? இங்கே, சட்டம் எப்போதும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. ஜெயா உயிருடன் இருந்த பொழுது பலவருடங்களாக தூங்கிய உச்சா நீதிமன்றம் அவர் இறந்தபின் சசிகலாவுக்கு ஒரே வாரத்தில் தீர்ப்பை வாங்கிவிட்டது. இதில் உச்சா நீதிமன்றம் தன்னுடைய கடமையை சரியாக செய்திருந்தாலும் சரியான நேரத்தில் செய்யவில்லை என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். இப்படி வேண்டுமென்றால் ஒரு நீதி வேண்டாமென்றால் ஒரு நீதி இந்தியாவில். கேட்பதற்கு யாருமில்லை. இது போன்ற விஷயங்கள் தான் இந்த போலி ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைக்கின்றன. பிஜேபி அதை மாற்றும் என்று நம்புவோம்.
Rate this:
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-202116:35:33 IST Report Abuse
Murugesanஇதை செய்வதே பி ஜெ பி தான் , வட நாட்டு அரசியவாதிகளுக்கு என்றைக்குமே நல்ல எண்ணம் கிடையாது , ஆங்கில ஆட்சியில் மொத்த இந்தியாவின் வளங்களை சூறையடினார்கள் , இப்போது வட நாட்டவர்கள் தமிழக வளங்களை சுரண்டுகின்றார்கள் , நீதியை கொலை செய்கின்றனர் , காங்கிரஸ் விட பி ஜெ யினர் மிகவும் மோசமான எண்ணம் கொண்டவர்கள் கவர்னரின் செயல் நிரூபிக்கிறது , மோடி ஆட்சியில் நீதியெல்லாம் கிடைக்காது , தமிழனுக்கு இந்த விஷயத்தில் மட்டுமல்ல எல்லா சட்டப்போராட்டத்திலும் , அனால் தமிழன் இவங்களுக்கு ஓட்டு போடணுமாம்...
Rate this:
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
05-பிப்-202121:39:20 IST Report Abuse
Natarajan Ramasamy"அனால் தமிழன் இவங்களுக்கு ஓட்டு போடணுமாம்.."M பி எலெக்ஷனில் யாருக்கு ஓட்ட போட்டாய் ? BJP யுக்கா ADMK யுக்கா அல்லது DMK யுக்கா?...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
05-பிப்-202110:43:39 IST Report Abuse
Rengaraj எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத வடுவாக மனதில் இருக்கும் ஒரு கோர படுகொலை இந்த தமிழ் மண்ணில் நிகழ்ந்தது. ஒரு தீவிரவாத கூட்டமே நிறைய உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. ஒரு உயிரை எடுக்கும் உரிமை இங்கு யாருக்கும் கிடையாது என்று சட்டம் சொல்கிறது. குற்றம் புரிந்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மன்னிப்பு என்ற வகையில் தண்டனைக்கு உள்ளானவர்களை விடுவிப்பது என்பது அங்கு பலியானவர்களின் குடும்பத்தினரும் குற்றவாளிகளை மன்னித்து விட்டனர் என்றாகி விடுமா ?? பலியானவர்கள் குடும்பத்தின் சார்பில் நம் நாட்டின் தலைகுடிமகன் அதாவது ஜனாதிபதி மன்னிப்பு வழங்கலாம் என்பது ராஜதர்மம் என்று எடுத்துகொள்ளலாமா ?? நம் நாட்டின் இந்திய அரசியல் சட்டம் அதற்கு வழிவகை செய்துள்ளதா ?? சட்ட வல்லுனர்களின் ஆலோசனை மிகவும் முக்கியம். நீதி பிறழ்ந்துவிடக்கூடாது.
Rate this:
Nachiar - toronto,கனடா
05-பிப்-202118:51:58 IST Report Abuse
Nachiarஒரு கொலையா? இருபது கொலைகள், இன்னும் எத்தனையோ கொலை முயற்ச்சி, நல்ல ஒரு வாழ்க்கையை இழந்து நடை பிணமாய் வாழும் இந்திய செல்வங்கள். இவர்களுக்கு யார் பதில் சொல்வர்? ஒவ்வொருவரும் குறைந்தது பரோலில் வர முடியாத இருபது ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஜெய் ஹிந்...
Rate this:
P.Narasimhan - Tirupattur, Tirupattur Dist,இந்தியா
05-பிப்-202119:26:40 IST Report Abuse
P.Narasimhan"குற்றம் புரிந்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது" - விசாரணை அதிகாரியே குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அவர்களின் வாதத்தை சரியாக பதிவு செய்யவில்லை என ஓய்வு பெற்றதும் சமூக வெளியில் பதிவு செய்கிறார் எனில் ?...
Rate this:
Cancel
Kalai Arashan - Quito,ஈக்வடார்
05-பிப்-202109:53:59 IST Report Abuse
Kalai Arashan இந்தியாவின் மிகசிறந்த கால்பந்தாட்ட வீரர்கள். பந்த இவர் உதைப்பார் பிறகு அவர் உதைப்பார் இடையில் ஒருவர் விசில் அடிப்பார், மொத்தத்தில் பார்வையாளர் கண்ணைவிட்டே பந்து காணாமல்போகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X