அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தகிடுதத்தோம் போடும் ஸ்டாலின்!

Updated : பிப் 05, 2021 | Added : பிப் 05, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'கடந்த தேர்தலில், இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும் என, மக்கள் ஓட்டுப் போடவில்லை. அவர், எம்.எல்.ஏ., ஆவதற்கு மட்டுமே ஓட்டு போட்டனர்' என, ஸ்டாலின் கூறியுள்ளார். வாஸ்தவம் தான்; அதனால் என்ன?இ.பி.எஸ்., என்ன முதல்வர் பதவியை திருடிக் கொண்டாரா?ஜெ., மறைவுக்கு
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'கடந்த தேர்தலில், இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும் என, மக்கள் ஓட்டுப் போடவில்லை. அவர், எம்.எல்.ஏ., ஆவதற்கு மட்டுமே ஓட்டு போட்டனர்' என, ஸ்டாலின் கூறியுள்ளார். வாஸ்தவம் தான்; அதனால் என்ன?

இ.பி.எஸ்., என்ன முதல்வர் பதவியை திருடிக் கொண்டாரா?ஜெ., மறைவுக்கு பின், மெஜாரிட்டி, எம்.எல்.ஏ.,க்களின் தேர்வில் தானே, அவர் முதல்வரானார். இது அரசியல் சாசன சட்டப்படி சரி தானே! பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவில் தான், முதல்வராக முடியும்; மக்கள் நேரடியாக முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாது.

அண்ணாதுரை மறைவுக்கு பின், இதே லட்சணத்தில் தானே கருணாநிதியும் முதன்முதலாக முதல்வரானார். ஆக, மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடமா?


latest tamil newsஇதைவிட காமெடி... அன்று இவரது அப்பா கருணாநிதி, தேர்தல் பிரசாரத்தில், 'எம்.ஜி.ஆர்., அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்; குணமாகி வந்தவுடன், ஆட்சியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன். தயவுசெய்து எனக்கு ஓட்டு போடுங்கள்' என, கெஞ்சினார். இன்று, கருணாநிதியின் மகன் ஸ்டாலின், பொது தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், 'நான், எம்.ஜி.ஆரின் பரம ரசிகன்' என, பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.

கடந்த, 1967ல், எம்.ஜி.ஆர்., குண்டடிப்பட்ட போஸ்டரை வைத்து தானே, முதன்முதலாக தேர்தலில் ஜெயித்து, தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் பொதுக்குழுவில், 'வெற்றிக்கு உழைத்த, எம்.ஜி.ஆருக்கு நன்றி' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆம்... அன்றும், இன்றும், தி.மு.க., வெற்றிக்காக, ஒரு தனி மனிதருக்கு தீர்மானம் போட்டு நன்றி சொன்னது, எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான்.

அந்த வகையில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான ஸ்டாலின், அவரது நினைவு நாளன்று, நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தவில்லையே... ஏன்? எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முருகனின் வேல், எம்.ஜி.ஆர்., ரசிகன் என, ஸ்டாலின் தகிடுதத்தோம் போடுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-பிப்-202121:25:09 IST Report Abuse
Natarajan Ramanathan நான் எந்த கோவிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன். எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பந்தயம் கட்டுகிறேன். தத்தி சுடலையால் சர்வ நிச்சயமாக தீயமுக ஆட்சியை அமைக்கவே முடியாது. புலம்பி சாகவேண்டியதுதான். இதையே மனுவாக எழுதியும் நூறுநாள் பெட்டியில் போட தத்தி சுடலையிடமே கொடுத்துவிட்டேன்....
Rate this:
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
05-பிப்-202120:08:12 IST Report Abuse
Muthukumaran 100 நாளில் மக்கள் குறைகளை களைகிறேன். அதுக்கு தனி அமைச்சகம் என்று உதார் விடும் சுடலை நீட் தேர்வை குடியரசு தலைவரின் ஆணையை பெற்று நிரந்தர நீக்கம் செய்து விட்டால் அடுத்த தேர்தலில் என் வோட்டு சுடலைக்கு தான். சுடலை தயாரா?
Rate this:
rao - ,
06-பிப்-202101:31:52 IST Report Abuse
raoNEET cant be removed in any states,under the directives of Supreme court ,NEET exam was brought in so that eligible candidates can appear and join the course.India needs efficient doctors and not capitation doctors who are no use to society....
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
05-பிப்-202119:19:39 IST Report Abuse
S. Narayanan Stalin will do efforts to cheat public and get vote. Public should be very careful this time.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X