தூத்துக்குடி : முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடைவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. 4ம் தேதி காலை பந்தல் திறப்பு விழாவும், இரவு மகுட ஆட்டமும் நடந்தது. அதைத்தொடர்ந்து செண்டை வாத்தியம், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு வில்லிசையும் அம்பிகைக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடந்தது. நேற்று அதிகாலை மகா கணபதிஹோமமும், அதைத்தொடர்ந்து பூரணாஹூதியும், காலை 6.30 முதல் 7.30மணிக்குள் கும்ப ஆவாஷணம் கும்ப பூஜை, ஜெபம் தேவி மகாத்மபாராயணம், அம்பாள் மூலமந்திர ஹோமமும் நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து அபிஷேக தீர்த்தம் பால்குடம் எடுத்து மேளதாளத்துடன் யானையுடன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது.
மதியம் மஹா அலங்காரம், மஹா தீபாராதனையும் நடந்தது. பகல் 1 மணிக்கு அபிஷேக பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சிறப்பு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து கரகாட்டமும், குறவன்,குறத்திஆட்டமும் நடந்தது.இரவு 12 மணிக்கு அம்பிகைக்கு அலங்கார தீபாராதனையும்,வாணவேடிக்கையுடன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று( 6ம் தேதி )அம்பிகைக்கு மஞ்சள்நீர் பொங்க வைத்து அம்பாள் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு பட்டிமன்றம், மேஜிக் ÷ஷா, பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடக்கிறது. வரும் 8ம் தேதி இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 9மணிக்கு பட்டிமன்றமும் நடக்கிறது. வரும் 9ம் தேதி இரவு திரைப்பட இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முக்காணி சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்துவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE