145 நாடுகளுக்கு தடுப்பூசி; 'சீரம் - யுனிசெப்' ஒப்பந்தம்

Updated : பிப் 05, 2021 | Added : பிப் 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
நியூயார்க்: உலகளவில், 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது தொடர்பாக, இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக, 'யுனிசெப்' எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள சீரம் நிறுவனம், உலகளவில் தடுப்பூசி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை
Corona Vaccine, serum, unicef

நியூயார்க்: உலகளவில், 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது தொடர்பாக, இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக, 'யுனிசெப்' எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள சீரம் நிறுவனம், உலகளவில் தடுப்பூசி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்த, 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர, அமெரிக்காவின், 'நேவாவேக்ஸ்' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.

இது குறித்து, யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரெட்டா போர் கூறிய தாவது:யுனிசெப், 'கோவக்ஸ்' திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, ஏழை நாடுகளுக்கு வழங்க உள்ளது. சீரம் நிறுவனத்தின், 'கோவிஷீல்டு' மற்றும் 'நோவாவேக்ஸ்' கொரோனா தடுப்பூசி மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்ய யுனிசெப் ஒப்பந்தம் செய்துள்ளது.


latest tamil news



110 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, 145 நாடுகளில் உள்ள, ஏழை மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு செலுத்த உள்ளோம். ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தின் சராசரி விலை, 225 ரூபாய் ஆக இருக்கும். இந்த திட்டத்திற்கு ஏராளமான அமைப்புகள் நிதியுதவி செய்துள்ளன. கோவக்ஸ் திட்டத்தில், அமெரிக்காவின் பைசர் - பயோடெக் கூட்டு நிறுவனத்திடம், நடப்பு முதல் காலாண்டில், 12 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து பெறப்பட்டு, 18 நாடுகளுக்கு வழங்கப்படும்.

மொத்தம், 4 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, அமெரிக்க சுகாதார கழகம் ஆராய்ந்து வருகிறது. ஒப்புதல் அளித்த பின், ஆப்கன் முதல், ஜிம்பாப்வே வரை, தடுப்பூசி மருந்து வினியோகிக்கப் படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-பிப்-202111:05:29 IST Report Abuse
Malick Raja இவர்கள் என்ன ஏற்றுமதி செய்தாலும் இறக்குமதி செய்தாலும் .. ஏழை எளிய நடுத்தர இந்தியர்களின் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது .. அதேசமயம் மக்கள் ஒன்றிணைந்தால் மாற்றம் நிச்சயம் . ஒரு சிலரின் வசதிக்காக பலகோடி மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது அறிவீனம்.. எரிபொருள் விலை குறையாவிடில் எதுவுமே உருப்படாது ...
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-202123:10:29 IST Report Abuse
Tamilan எவ்வளவு மருந்து ஏற்றுமதி செயகிறார்களோ அவ்வளவு கழிவு நாட்டுக்குள் கிடக்கும் . பனத்திரக்காக நாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது .
Rate this:
Cancel
05-பிப்-202115:24:45 IST Report Abuse
தேச நல விரும்பி வாழ்க பாரதம் வாழ்க விஞ்ஞானிகள் வாழ்க மோடி ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X