பொது செய்தி

இந்தியா

தேஜஸ் போர் விமானத்தில் பறந்து அசத்திய பா.ஜ., எம்.பி.,

Updated : பிப் 05, 2021 | Added : பிப் 05, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா நிகழ்ச்சியில், தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியாக கருத்தப்படும் 'ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சி, பெங்களூருவில் கடந்த 3ம் தேதி துவங்கி, இன்று(பிப்.,5) நிறைவடைகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்.,6, 7) கண்காட்சியை
BJP, Tejasvi Surya, Tejas

பெங்களூரு: பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா நிகழ்ச்சியில், தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியாக கருத்தப்படும் 'ஏரோ இந்தியா' சர்வதேச விமான கண்காட்சி, பெங்களூருவில் கடந்த 3ம் தேதி துவங்கி, இன்று(பிப்.,5) நிறைவடைகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்.,6, 7) கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.


latest tamil news



இந்நிலையில் 2வது நாளான நேற்று, பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியின் பா.ஜ., எம்.பி,,யான தேஜஸ்வி சூர்யா, தேஜஸ் விமானத்தில் பயணம் செய்து அசத்தினார். கூடியிருந்த பார்வையாளர்களும் அவருக்கு கைதட்டி உற்சாகப்படுத்தினர்.


latest tamil news


பயணத்துக்கு பின் அவர் கூறுகையில், 'ஆச்சரியம் நிறைந்த தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி' என்றார். அவர் போர் விமானத்தில் பயணம் செய்ய பயிற்சி பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202106:23:03 IST Report Abuse
J.V. Iyer தேஜஸ்வி சூர்யா இளைஞர்களின் உண்மையான தலைவர். துடிப்பு மிக்கவர். வருங்கால ஒளிவிளக்கு.
Rate this:
Cancel
Balasubramanian Sundaram - NewYork,யூ.எஸ்.ஏ
06-பிப்-202105:56:45 IST Report Abuse
Balasubramanian Sundaram இவரும்-தேஜஸ்வி சூர்யாவும் நம்ம அண்ணாமலையும் தான் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறார்கள் பாலா
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
05-பிப்-202119:58:56 IST Report Abuse
SUBBU தேஜஸ் விமானம் பற்றி இங்கு ஆளாளுக்கு பேசிகொண்டிருக்கின்றார்கள்.பாஜக எம்பி தேஜஸ்விசூர்யா இப்படி பொறுப்பான காரியத்தை செய்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் எம்பியான நம் பப்புவோ இன்னொரு எம்பியான ஜோதிமணியுடன் சேர்ந்து காளான் பிரியாணியும் தயிர்பச்சடியும் சமைத்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு கட்சியான திமுக காலிஸ்தான் தீவிரவாத போலி விவசாயிகளின் போராட்டத்தை தூண்டி விட டில்லிக்கு போய் விட்டார்கள். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரயிலையே ஓடவிடாத அவர்களுக்கு விமானம் அதுவும் போர் விமானமெல்லாம் புரியாத விஷயம்தான்.ஆக நாட்டுபற்றும் தேசத்தின் சாதனைகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும், கடப்பாடும் கொண்ட கட்சி எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X