பொது செய்தி

இந்தியா

பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல்: வேகமாக தயாராகிறது பட்டியல்

Updated : பிப் 05, 2021 | Added : பிப் 05, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு விலக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்த பட்டியல், இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என, 'நிடி ஆயோக்' துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் வசம் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் குறித்தும்
NitiAayog, Companies, NextList, DisInvestment, FewWeeks, RajivKumar, பொதுத்துறை, நிறுவனங்கள், பங்குகள், பட்டியல், நிடி ஆயோக், ராஜிவ் குமார்

புதுடில்லி: எந்தெந்த பொதுத் துறை நிறுவனங்களில், பங்கு விலக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்த பட்டியல், இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என, 'நிடி ஆயோக்' துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.

பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் வசம் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் குறித்தும் அறிவித்து இருந்தார். மேலும், நிடி ஆயோக் இது குறித்த பட்டியலை தயாரிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக, நிடி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார், இன்னும் இரண்டொரு வாரங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும் என, தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:பட்டியல் தயாரிக்கும்பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. இன்னும் சில வாரங்களில், பட்டியல் வெளியாகிவிடும். ஏற்கனவே, பங்கு விலக்கல்குறித்து, ஐந்து வித தொகுப்பு பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news



வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றை அமைப்பது மிகவும் இன்றியமையாத தேவையாகும். இல்லாவிட்டால், வாராக் கடன் பிரச்னையிலிருந்து வங்கிகள் மீள, அவற்றுக்கு நீண்ட காலம் பிடிக்கும் அல்லது அதிக முதலீடு தேவைப்படும். நாட்டின் பொருளாதார செயல்பாட்டுக்கு, வரி செலுத்துவோரின் பங்களிப்பை, நான் அங்கீகரிக்கிறேன். ஆனாலும் கூட, கடினமான காலங்களில், நாம் அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-202123:06:48 IST Report Abuse
Tamilan காசுக்காக நாட்டை அந்நியர்களுக்கு உள்நாட்டுக்கு முதலைகளுக்கு விற்கும் படலம் துரிதமாகிறது
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
05-பிப்-202118:32:02 IST Report Abuse
konanki தல, கலிபோர்னியா வில் 2 பேர் சந்திச்ச உடன் முதல் பேச்சு இன்ஷியூரன்ஸ் பத்தி தான். இந்தியா வில் இரண்டு பேர் சந்திச்ச உடன் முதல் பேச்சு மத்திய மாநில அரசுகள் என்ன இலவசமா குடுக்கறாங்க என்று தான். ஆனால் ஓரு விஷயம் பெரும் பான்மை யான மக்கள் இதை உணர்ந்து இந்தியாவிற்கு துரோகம் செய்வதில்லை. ஆனால் ஓரு கூட்டம் மட்டும் எல்லாம் அனுபவித்து குடுத்தவன் குடும்பத்திலேயே குண்டு வைக்கிற கூட்டம்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
05-பிப்-202118:25:46 IST Report Abuse
konanki வேலன் சார் கிட்னி போனாக்கூட மாற்று கிட்னி அறுவை சிகிச்சை டயாலிசிஸ் எல்லாம் இந்தியாவில் அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை. இந்த பட்ஜெட்டில் 75000 கோடி ரூபாய் ஒதுக்கீடு மருத்துவ சேவை க்கு. 35000 கோடி ஒதுக்கீடு யூக்கான் வைரஸ் தடூப்புசிக்கு. 14 மில்லியன் பேருக்கு 28 நாளில் இலவச தடூப்பூசி போட்டு உலக சாதனை. கலிபோர்னியா வில் இன்னிக்கு எத்தனை பேர் யூகான் வைரஸ் ல செத்தாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X