அறிவியல் ஆயிரம்
எத்தனை வகை
சீனாவில் தொடங்கிய கொரோனாவில் இருந்து தற்போது உருமாற்றம் பெற்றுள்ள பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, பிரேசில் கொரோனா வகை உட்பட உலகளவில் மொத்தம் 4 ஆயிரம் வகைகள் உள்ளன என பிரிட்டன் தடுப்பூசி மேலாண்மை துறை அமைச்சர் நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து கொரோனா பிறழ்வுகளுக்கும் எதிராக தற்போதைய தடுப்பூசி செயல்படாது என்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு தான். தடுப்பூசி நிறுவனங்களும் தங்களது தடுப்பூசி அனைத்து வகைக்கும் எதிராக செயல்படும் என உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.
தகவல் சுரங்கம்
முதல் பெண் கவர்னர்
நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றவர் வி.எஸ்.ரமாதேவி. 1990 நவ. 26 முதல் டிச. 11 வரை 16 நாட்கள் அப்பதவியில் இருந்தார். கர்நாடகாவின் ஒரே பெண் கவர்னரும் இவரே. 1999 டிச. 2 முதல் 2002 ஆக. 20 வரை கவர்னராக இருந்தார். ராஜ்யசபாவின் முதல் பெண் பொதுச்செயலராக 1993 ஜூலை 1 முதல் 1997 செப்., 25 வரை பதவி வகித்தார். இவர் ஆந்திராவில் 1934 ஜன. 15ல் பிறந்தார். எம்.ஏ., மற்றும் சட்டப்படிப்பு முடித்தவர். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர், ஹிமாச்சல் கவர்னராகவும் இருந்தவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE