தூத்துக்குடி: திராவிட பாரம்பரியம் பேசி வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மனைவி திருச்செந்தூர் சென்று முருகனை வழிப்பட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இவருடன் அவரது மனைவி துர்காவும் எப்போதும் செல்வது வழக்கம். ஆனால் அவர் மேடைகளில் தோன்ற மாட்டார். அவருக்கு கோயில் செல்வது ரொம்ப பிடிக்குமாம்.

ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பிரசாரம் செய்து தொடர்ந்து அவர் கன்னியாகுமரிக்கு பிரசாரம் சென்றார். இந்நேரத்தில் அவரது மனைவி துர்கா திருச்செந்தூர் சென்றார். அங்கு முருகபெருமானை தரிசித்தார். தொடர்ந்து 108 வைணவ திருத்தலங்கள் உள்ள நான்குநேரி சென்றார். அங்கு தோத்தாத்திரிநாதனை வழிப்பட்டார். வானமாமலை மடாதிபதி மதுரைகவி ராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார்.

துர்காவுடன் முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ் ஆர் , சுரேஷ்ராஜன் மனைவி, தூத்துக்குடி மாவட்ட மகளிரணியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி ஆகியோர் சென்றனர்.