நாகர்கோவில்: தற்போது தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பாதி அதிமுக ஆட்சி; பாதி பா.ஜ., ஆட்சி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுக அரசு, திட்டங்களை அறிவித்தாலும் அதனை செயல்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு மரண அடி கொடுக்க போகிறார்கள். தோல்வி பயத்தால் விவசாய கடனை, முதல்வர் ரத்து செய்துள்ளார். ஜன.,13ல், விவசாய கடன் ரத்து செய்யப்படும் எனு நான் அறிவித்தேன்.தற்போது அதிமுக அரசு அதனை செய்துள்ளது. நாளை நான் அறிவித்த நகைக்கடனையும் அறிவிப்பார்கள். முதல்வர் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். கூட்டுறவு கடன்தள்ளுபடி எதிர்த்து நீதிமன்றம் சென்றது. சட்டசபை தேர்தலில், அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.
அணைய போகும் விளக்கு போல் அதிமுக அரசு செயல்படுகிறது. வேலைவாய்ப்பு வழங்குவதில் குமரி மாவட்டத்திற்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞர்களின் நம்பிக்கை ஆணையமாக இருக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சி ஊழல் ஆணையமாக மாறியுள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், டி.என்.பி.எஸ்.சி.,யின் ஊழல் முறைகேடு களையப்படும். பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும்

தமிழக அரசின், டில்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் முக்கிய பணியான கலெக்சன், கரெக்சன் என உள்ளது. மாவட்ட மக்களுக்காக பணியாற்றவில்லை. அவரை பற்றி அதிமுகவினரே கூறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசாக திமுக ஆட்சி இருக்கும். நானோ மற்றவர்களோ பதவிக்காக அழைபவர்கள் அல்ல என்பதை மக்கள் அறிவார்கள். அரசியலில் நுழைந்ததும் சட்டசபையில் நுழையவில்லை. 25 ஆண்டு அரசியலில் பணியாற்றிய பின் தான் அரசியலில் நுழைந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க வேண்டும் என கூறினர். அதிமுகவில் இருந்தும் தூதுவிட்டார்கள். அப்படி முதல்வர் ஆக விரும்பவில்லை.
கோடிக்கணக்கான மக்கள் ஓட்டு போட்டு ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்பினேன். அது தான் விரைவில் நடக்க போகிறது. தற்போது, நடப்பது முழுமையான ஆட்சி அல்ல. இது அறைகுறை அதிமுக ஆட்சி. பாதி அதிமுக ஆட்சி. பாதி பாஜ ஆட்சி. அதிமுக நாட்டை கெடுத்து வருகிறது. இந்த அறைகுறை ஆட்சிக்கு முடிவு கட்ட திமுகவிற்கு வாய்ப்பு தர வேண்டும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE