அறிவியல் ஆயிரம்
ஆளில்லா ஹெலிகாப்டர்
ஐ.ஐ.டி., கான்பூர் பல்கலையின் ஏரோநாட்டிக்கல் துறை, ஆளில்லா 'டிரோன் - ஹெலிகாப்டரை' வடிவமைத்துள்ளது. இது தொலைதுார இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்கு பயன்படும். இது 5 கிலோ எடை வரை தாங்கும் திறன் பெற்றது. தொடர்ந்து 50 கி.மீ., துாரம் வரை பறந்து செல்லும். இதில் எடை ஐந்து கிலோவை விட குறைக்கப்பட்டால், 100 கி.மீ., துாரம் வரை செல்லும். இது 11,500 அடி உயரம் வரை பறக்கும். பெட்ரோலில் இயங்கும் இந்த 'டிரோன் -ஹெலிகாப்டர்' மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை செயல்படும்.
தகவல் சுரங்கம்
மயக்கும் 'மச்சு பிச்சு'
பெரு நாட்டின் முக்கியமான சுற்றுலா தலம் 'மச்சு பிச்சு'. இது கடல் மட்டத்தில் இருந்து 7970 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 15ம் நுாற்றாண்டை சேர்ந்த வரலாற்று நகரம். 'இன்காக்களில் தொலைந்த நகரம்' எனப்படும் இது இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. 1911ல் கண்டுபிடிக்கப் பட்டது. 1983ல் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டு சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றது. 2007ல் உலக அதிசயத்தில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. 'ராயல் எஸ்டேட்' என அழைக்கப்படும் இப்பகுதியில் 750 பேர் வாழ்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE