விவசாய போராட்டத்திற்கு அனுமதி: அமெரிக்க பார்லி குழு வலியுறுத்தல்

Updated : பிப் 06, 2021 | Added : பிப் 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
வாஷிங்டன்: 'அமைதியான முறையில் விவசாயிகள் போராடுவதற்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்' என, அமெரிக்க பார்லி.,யின் இந்தியாவுக்கான குழு வலியுறுத்தியுள்ளது.விவசாயச் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரெஹானா உள்ளிட்டோர் சமீபத்தில் கருத்து

வாஷிங்டன்: 'அமைதியான முறையில் விவசாயிகள் போராடுவதற்கு, இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்' என, அமெரிக்க பார்லி.,யின் இந்தியாவுக்கான குழு வலியுறுத்தியுள்ளது.latest tamil news


விவசாயச் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரெஹானா உள்ளிட்டோர் சமீபத்தில் கருத்து தெரிவித்தனர்.இதற்கு, இந்திய வெளியுறவுத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

'இந்தப் போராட்டத்தை இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலுக்கு உட்பட்டே பார்க்க வேண்டும். அமெரிக்க பார்லியில் சமீபத்தில் நடந்த வன்முறை ஏற்படுத்திய அதே தாக்கத்தை, டில்லி செங்கோட்டையில் நடந்த வன்முறையும் ஏற்படுத்தியுள்ளது' என, இந்திய வெளியுறவுத் துறை குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க பார்லி.,யின், இந்தியாவுக்கான குழுவின் துணைத் தலைவர் பிராட் ஷெர்மான் கூறியுள்ளதாவது:இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து, பார்லி.,யின் இந்தியாவுக்கான குழு ஆலோசனை செய்தது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதிக்கப்பட வேண்டும். முடக்கப்பட்ட, இணைய வசதியை திரும்ப அளிக்க வேண்டும்.உலகின் மிகப் ெபரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இது தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் தரன்ஜித் சிங் சாந்துவை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


latest tamil news


டிரம்புக்கு தகவல் தர எதிர்ப்புஅமெரிக்க சட்டங்களின்படி, முன்னாள் அதிபர்களுக்கு, முக்கியமான உளவுத் தகவல்கள் தெரிவிக்கப்படும்.இந்நிலையில், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டியில், அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது:முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், மிகவும் ஆபத்தானவர்; ஒழுங்கீனமானவர். அவர் எந்த நல்ல ஆலோசனையையும் வழங்கப் போவதில்லை. எதற்காக, அவருக்கு உளவு தகவல்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-பிப்-202113:26:31 IST Report Abuse
Sridhar 2 மாதத்திற்கு மேல் சாலைகளை மறித்துகொண்டு பொதுமக்களுக்கும் சிறு குறு வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய வேதனையை கொடுத்துவந்தார்களே, அப்போது அந்த பொதுமக்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டதே அதை ஏன் இந்த பாராளுமன்ற குழு கேட்கவில்லை?
Rate this:
Cancel
07-பிப்-202112:17:33 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்த காலிஸ்தான் கொடியை வெள்ளை மாளிகையின்மேல் ஏற்றுவர். 😉பரவாயில்லையா?
Rate this:
தமிழன் - தமிழகம்,இந்தியா
07-பிப்-202116:29:37 IST Report Abuse
தமிழன்மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் எல்லா மாற்றங்களும் நிகழும். இது இயற்கை....
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
07-பிப்-202108:57:20 IST Report Abuse
PANDA PANDI HOWDY DADDY. BIG AAPU.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
08-பிப்-202110:09:56 IST Report Abuse
கல்யாணராமன் சு.congratulaions for demonstrating your absolutely poor, pathetic politcal awarenss .......... keep it up .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X