அரசியல் செய்தி

தமிழ்நாடு

234 தொகுதியிலும் வெற்றி: ஸ்டாலின் விருப்பம்

Updated : பிப் 08, 2021 | Added : பிப் 06, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
நாகர்கோவில்: ''தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,'' என,தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார். குமரி மாவட்டம், நாகர்கோவில் தனியார் கல்லுாரியில் நேற்று நடந்த, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், பொது மக்களிடம் மனு வாங்கி, அவர் பேசியதாவது:கன்னியாகுமரி கடலில், திருவள்ளுவருக்கு, 133 அடி உயர சிலை
234 தொகுதிகள், வெற்றி, ஸ்டாலின்,

நாகர்கோவில்: ''தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,'' என,தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் தனியார் கல்லுாரியில் நேற்று நடந்த, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், பொது மக்களிடம் மனு வாங்கி, அவர் பேசியதாவது:கன்னியாகுமரி கடலில், திருவள்ளுவருக்கு, 133 அடி உயர சிலை அமைத்து, குமரி கடலை தமிழ் கடலாக மாற்றியவர் கருணாநிதி. 1966 முதல் கட்சி பணியாற்றி வரும் நான், 1984ல் தான் எம்.எல்.ஏ., ஆனேன்.

அதன்பின் நடந்த பல தேர்தல்களில் நின்று, எம்.எல்.ஏ.,வான போது, கருணாநிதியிடம் செய்தியாளர்கள், 'ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்பாரா' என கேட்டனர். அதற்கு கருணாநிதி, 'அமைச்சராகும் தகுதி அவருக்கு உள்ளது. ஆனால், என் மகன் என்பதால், அந்த தகுதியை இழந்து விட்டார்' என்றார்.
ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுத்தி, நான் ஆட்சியை பிடிப்பேன் என்றனர். அதற்கு துாது வந்தவர்கள் யார் என்று இப்போது சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் நடப்பது, அரை அ.தி.மு.க., ஆட்சி. அரை பா.ஜ., ஆட்சி.இந்த அரை குறை ஆட்சியை அகற்ற, கடந்த தேர்தல் போல், குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-பிப்-202111:22:38 IST Report Abuse
Matt P அமைச்சராகும் தகுதி அவருக்கு உள்ளது. ஆனால், என் மகன் என்பதால், அந்த தகுதியை இழந்து விட்டார்' என்றார்.தலைவரு சரியா தான் சொல்லியிருக்காரு...மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி தந்தை விரும்பாதத்தை செயாமலிருப்பது தான்.
Rate this:
Cancel
07-பிப்-202123:04:29 IST Report Abuse
theruvasagan தினமலருக்கு மாத்திரம் எப்புடி தலையோட ஒரிஜனல் கெட் அப் போட்டோ கெடைச்சுது. செமையா அம்சமா இருக்கு. கலக்கறீங்க போங்க.
Rate this:
Cancel
07-பிப்-202122:53:52 IST Report Abuse
theruvasagan 234 தொகுதிகளிலும் நீங்கதானா. அப்ப கூட்டணி கட்சிகளுக்கு உங்க இதயத்துலதான் இடமா. அப்படியே தோப்பனார் கடைபிடிச்ச பார்முலா. வெள்ளாமை செய்யறது வெள்ளையப்பன். உக்காந்து திங்கிறது திண்ணியப்பன். நல்லா வருவீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X