அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார்: முதல்வர்

Updated : பிப் 07, 2021 | Added : பிப் 07, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
போரூர்: நான் சொல்வதை தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதை தான் ஸ்டாலின் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில், இரண்டாம் கட்டமாக பிரசாரத்தை துவக்கிய முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நான் சொல்வதைதான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான்
அதிமுக, முதல்வர் பழனிசாமி, இபிஎஸ், பழனிசாமி, எட்பபாடி பழனிசாமி, திமுக, ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின்

போரூர்: நான் சொல்வதை தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதை தான் ஸ்டாலின் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில், இரண்டாம் கட்டமாக பிரசாரத்தை துவக்கிய முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நான் சொல்வதைதான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை திமுக சொல்லி கொண்டே இருக்க போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்க போகிறது. திமுக ஆட்சிக்கு வர முடியாது. சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் செய்தது என்ன? செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். வழக்கத்தை மாற்றாமல், ஊர் ஊராக பெட்டியுடன் சுற்றி வருகிறார்.


latest tamil news


நான் ஒரு விவசாயி. விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு தெரியும் என்பதால் தான் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது தான் அதிமுக அரசு. மக்களிடம் இருந்து எடுப்பது திமுக... மக்களுக்கு கொடுப்பது அதிமுக. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து இல்லாமல், மக்கள் அதிமுக ஆட்சியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், திமுகவினர் வெறியில் உள்ளனர். வீட்டு மக்களை நினைத்து கொண்டே, நாட்டு மக்களை மறந்தவர்கள் திமுகவினர். கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின், அடுத்து உதயநிதி என திமுகவில் குடும்ப அரசியல் செய்கிறது. பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால், அதனை ஸ்டாலினுக்கு வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-202100:26:27 IST Report Abuse
தமிழவேல் இன்னொருத்தர காணோமே... 🤔 வேற ஏதாவது முடிவு பண்ணிட்டாரோ ...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-202100:08:25 IST Report Abuse
தமிழவேல் நீங்கதானே சொன்னது (அவரு) "சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்"னு 🤔🤔🤔
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
07-பிப்-202122:21:50 IST Report Abuse
Sundar You are announcing only after the announcement of Stalin. If your stand is correct you should have announced during or after lifting 'Lock down'. Your statement is not convincing.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X