அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை தமிழகம் வருகிறார் சசிகலா ;ஆதரவாளர்களை சந்திக்கிறார்

Updated : பிப் 07, 2021 | Added : பிப் 07, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, நாளை (பிப்.,08) தமிழகம் வரவுள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டை முடிந்து கடந்த ஜன.,27ம் தேதி விடுதலையானார். அதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜன.,31ல் டிஸ்சார்ஜ் ஆனார். அவர்
Sasikala, Tamilnadu, Karnataka, சசிகலா, தமிழகம், வருகை, விடுதலை

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, நாளை (பிப்.,08) தமிழகம் வரவுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டை முடிந்து கடந்த ஜன.,27ம் தேதி விடுதலையானார். அதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜன.,31ல் டிஸ்சார்ஜ் ஆனார். அவர் தற்போது தேவனஹல்லி அருகே உள்ள கோடாகுருக்கி பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் தங்கி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

தமிழகத்திற்கு நாளை (பிப்.,08) வரவுள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க சசிகலா ஆதரவாளர்களும், அமமுக கட்சியினரும் திட்டமிட்டுள்ளனர். பெங்களூரு கிராமப்புறம் வழியாக நந்திஹில்ஸ், தேவனஹல்லி விமான நிலையம் அருகே, இளகங்கா, ராம்மூர்த்தி ரோடு, டின் பேக்டரி, ஒசூர் ரோடு, சில்க்போர்டு ஜங்ஷன், ஹத்திப்பள்ளி வழியாக அவர் சென்னை வருகிறார். அவரை வரவேற்று சென்னை, பெரம்பலூர் பகுதிகளில் அதிமுக.,வினர் போஸ்டர் அடித்துள்ளனர்.


latest tamil newsமுன்னதாக சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் அடித்தவர்கள் அதிமுக., கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் டிஜிபி.,யிடம் மனு அளித்திருந்தனர்.


எங்கு தங்குகிறார்?


தமிழகம் திரும்பும் சசிகலா, எங்கு தங்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை வரும் அவர், தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனது அண்ணண் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கவிருக்கிறாராம். மேலும், அவர் தங்குவதற்காக, அந்த வீட்டில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்தபடியே கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திப்பதற்காக வீட்டின் முகப்பு வாயிலில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kes7 - Springfield,யூ.எஸ்.ஏ
08-பிப்-202101:50:20 IST Report Abuse
Kes7 மக்களே தங்கள் உடமைகள் பத்திரம், அலிபாபா கதையில் வரும் திருடர்கள் கூட்டம் பராக் பராக் ... சொத்து பத்திரங்கள் பத்திரம் ... :)
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-பிப்-202123:33:03 IST Report Abuse
DARMHAR முதல்வர் பழனிச்சாமியுடன் சசிகலா தந்திரங்கள் பலிக்காது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-பிப்-202123:07:09 IST Report Abuse
Ramesh Sargam ஏதோ ஆங்கிலேயர்களிடம் அந்த காலத்தில் போரிட்டு, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த ஒரு தியாகி வருவது போல ஏன் இந்த build up???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X