வாரிசு அரசியலுக்கு இடமில்லை: பிரதமரின் சகோதரர் மகளுக்கு அனுமதி மறுப்பு

Updated : பிப் 07, 2021 | Added : பிப் 07, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர் மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதிய விதியை காரணம் காட்டி, பா.ஜ., நிராகரித்துவிட்டது.பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி. இவர், நியாய விலை கடை வைத்துள்ள இவர், குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகள்
Modi, Prahaladmodi, sonalmodi, ahmadabad, election, பிரதமர் மோடி, சகோதரர், பிரஹலாத் மோடி, சோனல்

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர் மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதிய விதியை காரணம் காட்டி, பா.ஜ., நிராகரித்துவிட்டது.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி. இவர், நியாய விலை கடை வைத்துள்ள இவர், குஜராத்தில் உள்ள நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள், சோன் மோடி. இவர், விரைவில் நடைபெற உள்ள ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், சமீபத்தில், வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இதில் சோனல் பெயர் இடம்பெறவில்லை. எந்த வார்டிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு, வரும் தேர்தலில் போட்டியிட, கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற விதிமுறை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இது தொடர்பாக பா.ஜ., மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், வரும் தேர்தலில் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என விதிமுறை வகுக்கப்பட்டது. விதிமுறைகள் அனைவருக்கும் சமம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

சோனல் மோடி கூறுகையில், பா.ஜ., தொண்டர் என்ற அடிப்படையில் தான் வாய்ப்பு கேட்டேன். பிரதமரின் உறவினர் என்பதற்காக வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வழக்கமான கட்சி தொண்டராகவே செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரஹலாத் மோடி கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள், விருப்பமான முடிவை எடுக்க சுதந்திரம் உள்ளது. எனது குடும்பத்தினர் பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தவில்லை. அதனை பயன்படுத்தி எந்த சலுகையையும் அனுபவிக்கவில்லை. நாங்கள் சொந்தமாக உழைத்து வாழ்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-பிப்-202104:30:47 IST Report Abuse
தல புராணம் ராணுவ அமைச்சர்க்கு அதெல்லாம் கிடையாது..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-202102:34:19 IST Report Abuse
J.V. Iyer அவர் என்ன பாவம் செய்தார் பாவம்?
Rate this:
Cancel
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
08-பிப்-202100:16:53 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி வாரிசு இல்லாததால் மோடியின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றது என வரலாற்றில் பதிவு செய்துகொள்ளலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X