மேலும் 7 தடுப்பூசிகள் வரவுள்ளன: ஹர்ஷ்வர்தன்

Updated : பிப் 07, 2021 | Added : பிப் 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.இந்தியாவில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் முதல்கட்டமாக முன்கள
India, Developing, CovidVaccines, Harshvardhan, ஹர்ஷ்வர்தன், கொரோனா, தடுப்பூசி, தடுப்பு மருந்து

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 57.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


latest tamil news


கொரோனா வைரசுக்கு எதிராக தற்போது 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கோவிஷீல்ட், கோவாக்சின் மருந்துகள் முன்களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலும் 7 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியா மிகப்பெரிய நாடு, மக்கள் தொகை அதிகம் என்பதால், ஒவ்வொருக்கும் கிடைக்கும் வகையில் அதிகமான தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்போதுள்ள சூழலில் சந்தையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி விற்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் சூழலை கட்டுப்படுத்த முடியாத நிலை கூட உருவாகலாம். எனவே, எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் அரசு முடிவெடுக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மார்ச் மாதத்திலிருந்து துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
07-பிப்-202119:28:58 IST Report Abuse
Hari சீனாவில் கொரோன இறப்பு வெறும் தொண்ணூற்றின் மூன்று ஆயிரம் என்ற அளவில் இருக்கும்போது இந்தியாவில் ஒருலட்சத்து நாற்பது ஆயிரம் மரணம் இங்கு அதிகமே. நாம் இன்னும் விழிப்புடன் முன்னேறவேண்டும் .
Rate this:
Cancel
07-பிப்-202117:04:29 IST Report Abuse
ஆப்பு ஏழு தடுப்பூசிகளை வெச்சுக்கிட்டு விக்காம என்ன செய்யப் போறீங்க?
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
07-பிப்-202118:37:26 IST Report Abuse
vadiveluதேவையான நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைப்பாங்க.இதுவே ஆட்சி அவிங்க கையில் இருந்தா பல் லட்சம் கோடியாய் கமிஷனாகவே அடிச்சு இருப்பாங்க....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-பிப்-202116:51:13 IST Report Abuse
RajanRajan தடுப்பூசி உற்பத்தியில் இந்திய முன்னிலையடைவது உலகளவில் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம். மேக் இன் இந்தியா உச்சம் தொட வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X