சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 07, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவு'இன்புளுயன்சா' உட்பட பருவகால 'ப்ளு' தடுப்பூசி களை செலுத்திக்கொள்ளும் குழந்தைகளுக்கு, கொரோனா பாதிப்பு அறிகுறிகள் ஏற்படுவதற்கு 25 சதவீதம் வாய்ப்பு குறைவு என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அர்கான்சஸ் நகரில் 2020 பிப்.1--ஆக.30 வரை கொரோனாவால் பாதிக்கப் பட்ட 905 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பாதி பேர்

அறிவியல் ஆயிரம்
குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவு

'இன்புளுயன்சா' உட்பட பருவகால 'ப்ளு' தடுப்பூசி களை செலுத்திக்கொள்ளும் குழந்தைகளுக்கு, கொரோனா பாதிப்பு அறிகுறிகள் ஏற்படுவதற்கு 25 சதவீதம் வாய்ப்பு குறைவு என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அர்கான்சஸ் நகரில் 2020 பிப்.1--ஆக.30 வரை கொரோனாவால் பாதிக்கப் பட்ட 905 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பாதி பேர் 'ப்ளு' தடுப்பூசி செலுத்தியவர்கள். இருப்பினும் இவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அறிகுறி 32 சதவீதம் குறைகிறது. மேலும் கொரோனா பாதிப்பு 33 சதவீதம் குறைகிறது என தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்
பல்லுயிர் பாதுகாப்பகம்

அசாமின் 'மானஸ் தேசிய பூங்கா' யுனெஸ்கோ உலக பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் உள்ளது. இது புலி, யானைகள் காப்பகமாக உள்ளது. மேலும் பல்லுயிர் பாதுகாப்பகமாகவும் திகழ்கிறது. அசாமின் ரூப்டு ஆமை உட்பட பல்வேறு அழியும் நிலையிலுள்ள விலங்குகள் வாழ்கின்றன. 1928 அக்.1ல் துவக்கப்பட்டது. பரப்பளவு 950 சதுர கி.மீ. பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான 'மானஸ்' பெயரில் இருந்து, இந்த பூங்காவிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது கவுகாத்தியில் இருந்து 167 கி.மீ., தொலைவில் பூடான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X