ஹிந்தி திணிப்பு இல்லை!

Updated : பிப் 08, 2021 | Added : பிப் 07, 2021
Share
Advertisement
'ஹிந்தி திணிப்பு' என்ற ஆயுதத்தை, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அடிக்கடி கையில் எடுப்பது வழக்கம். 'பா.ஜ., தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கிறது' எனக் கூறி, பிரசாரம் செய்து, தேர்தல்களில் ஓட்டு வாங்குவர். இந்த விவகாரத்துக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், பிரதமர் மோடி.'உங்களுக்கு எந்த மொழியில் நன்றாக பேச வருமோ, அந்த மொழியில் கருத்துக்களை தெரிவியுங்கள். ஹிந்தியில் தான் பேச
டில்லி உஷ்,அமித் ஷா எம்.பி., ஹிந்தி,பட்ஜெட், நிர்மலா சீதாராமன்


'ஹிந்தி திணிப்பு' என்ற ஆயுதத்தை, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அடிக்கடி கையில் எடுப்பது வழக்கம். 'பா.ஜ., தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கிறது' எனக் கூறி, பிரசாரம் செய்து, தேர்தல்களில் ஓட்டு வாங்குவர். இந்த விவகாரத்துக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், பிரதமர் மோடி.'உங்களுக்கு எந்த மொழியில் நன்றாக பேச வருமோ, அந்த மொழியில் கருத்துக்களை தெரிவியுங்கள். ஹிந்தியில் தான் பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என, சமீபத்தில், மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார் மோடி. பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, நிதி அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினாலும், இடையில் ஹிந்தியிலும் பேசுவர். கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், அடிக்கடி ஹிந்தியிலும் பேசினார். ஆனால் இந்த முறை, ஆங்கிலத்தில் மட்டுமே பட்ஜெட் உரையை படித்தார். இடையில் ஹிந்தியை கலக்கவில்லை. மேலும், இந்த முறை, நிதி அமைச்சரே தன் உரையைத் தயார் செய்துள்ளார். வழக்கமாக, அதிகாரிகள் தயார் செய்யும் உரையில், அமைச்சர்கள் சில மாற்றங்களைச் செய்வது வழக்கம். ஆனால், பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்ததால், நிதி அமைச்சரே, தன் உரையை தயார் செய்தார். இதனால், ஹிந்தி நன்றாக தெரிந்திருந்தும், இடையில் அதை கலக்காமல், முழுமையாக ஆங்கிலத்தில் பேசி, அசத்தி விட்டார் நிர்மலா சீதாராமன்.


அமித் ஷாவிடம் பேசிய எம்.பி.,



லோக்சபாவில் தினமும் கூச்சல், குழப்பம் அரங்கேறி வருகிறது. விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். தி.மு.க., - எம்.பி.,க்கள், மிகவும் ஆக்ரோஷமாக, சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.சமீபத்தில், சபையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதைப் பார்த்து, கடும் கோபத்துடன், அவர்களை நோக்கியுள்ளார். உடனே, தி.மு.க., - எம்.பி., ஒருவர், அமித் ஷாவின் இருக்கைக்கு சென்று, அவரிடம் சில நிமிடங்கள் பவ்யமாக பேசியுள்ளார்.இது, மற்ற தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. 'அவர் எதற்கு, அமித் ஷாவிடம் பேசினார்' என, தங்களுக்குள் முணு முணுத்தனர். அந்த எம்.பி., மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர், அமித் ஷாவிடம் பவ்யம் காட்டியது, மற்ற, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. மற்றொரு பக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், அடிக்கடி, காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் பேசுவதும், தி.மு.க., வினரை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி, கமலுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, அவர்கள் ராகுலிடம் பேசுகின்றனரோ' என, தி.மு.க.,வினர் சந்தேகப்படுகின்றனர்.


பீஹாரில் கடும் குழப்பம்!



பீஹாரில், ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே, பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வினர், அரசு நிர்வாகத்தில், தங்கள் இஷ்டப்படி செயல்படுவதாக, நிதிஷ் தரப்பு புலம்புகிறது. ஆட்சி கவிழாமல் இருப்பதற்காக, வேறு வழியின்றி நிதிஷ் குமார் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நிதிஷ் குமார் சுய கவுரவம் பார்க்கும் அரசியல்வாதி. இதனால், நிதிஷ் குமார் அரசு, அதிக நாட்கள் நீடிக்காது எனக் கூறப்படுகிறது. பா.ஜ.,வை கழற்றி விட்டு, லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்ப்பது குறித்து, நிதிஷ் குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X