வேளாண் சட்டம்: மன்மோகன் சொன்னதை நாங்கள் செய்துள்ளோம் - மோடி| Dinamalar

வேளாண் சட்டம்: மன்மோகன் சொன்னதை நாங்கள் செய்துள்ளோம் - மோடி

Updated : பிப் 08, 2021 | Added : பிப் 08, 2021 | கருத்துகள் (106) | |
புதுடில்லி: வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் பேசியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நாடு தற்போது வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது
PMModi, FarmLaws, ManmohanSingh, FarmersProtest, பிரதமர், மோடி, வேளாண் சட்டங்கள், மன்மோகன் சிங்,

புதுடில்லி: வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் பேசியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நாடு தற்போது வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளது. நம் நாட்டின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி உரையை கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது.



latest tamil news



இந்தியா தற்போது வாய்ப்புகளுக்கான நாடாக மாறியுள்ளது. இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்க மாட்டோம். உலகமே தற்போது இந்தியா முன்னெடுத்து இருக்கக்கூடிய தீர்வுகளை கண்டறிய கவனம் செலுத்துகிறது. முன்பின் தெரியாத ஒரு எதிரியான கொரோனாவை நாடு சந்திக்க வேண்டியிருந்தது.



கொரோனாவுக்கான விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள் கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். இந்தியாவில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இன்றைய மற்றும் நாளைய இந்தியாவை பற்றி சிந்திக்க வேண்டும்.



latest tamil news


போலியோ, சின்னம்மை போன்ற அச்சுறுத்தல்களையும் இந்தியா கண்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இந்தியாவிற்கு கிடைக்குமா அல்லது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது நம் நாடு சொந்தமாக தடுப்பூசி கண்டறிந்து உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. இது நமது தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது.



விவசாயிகளுடன் பேச தயார்


புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகாது. விவசாய பிரச்னைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம்.



3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடி வரும் விவசாயிகளுடன் பேச தயார். பிரச்னைகளை கூட்டாக விவாதித்த தீர்வு காண வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்ப்போர்கள் கூறும் வாதங்களில் எந்த சாரமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X