சசிகலா காரை மாற்றியது ஏன் ? தமிழக எல்லையில் நடந்தது என்ன ?

Updated : பிப் 08, 2021 | Added : பிப் 08, 2021 | கருத்துகள் (130) | |
Advertisement
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையிலிருந்து விடுதலை பெற்று சசிகலா இன்று (பிப்.,08) காலை பெங்களூருவிலிருந்து தமிழகம் நோக்கி கார்கள் படைசூழ வந்து கொண்டிருக்கிறார். போலீசார் தடை இருந்தும் அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதற்கிடையில் அவர் வந்த காரை திடீரென மாற்றினார். தமிழகம் திரும்பும் சசிகலாவுக்கு அமமுகவினர் பல இடங்களில்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையிலிருந்து விடுதலை பெற்று சசிகலா இன்று (பிப்.,08) காலை பெங்களூருவிலிருந்து தமிழகம் நோக்கி கார்கள் படைசூழ வந்து கொண்டிருக்கிறார். போலீசார் தடை இருந்தும் அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதற்கிடையில் அவர் வந்த காரை திடீரென மாற்றினார்.



latest tamil news



தமிழகம் திரும்பும் சசிகலாவுக்கு அமமுகவினர் பல இடங்களில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். கர்நாடக தமிழக எல்லையான ஜூஜூவாடியில் அவரது கட்சியினர் மற்றும் அதிருப்தி அதிமுகவினர் 5000க்கும் மேற்பட்டோர் மேளதாளம் முழங்க அவரை வரவேற்றனர் . அவர் தற்போது கிருஷ்ணகிரியை கடந்து வந்து கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை வருகிறார். சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தல், அ.தி.மு.க., கட்சி கொடியை பயன்படுத்துதல், பதாகைகளை ஏந்துதல் ஆகியவற்றிற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.


latest tamil news





சசிகலா, தினகரனுக்கு போலீசார் நோட்டீஸ்


ஒசூர் அருகே கார் வந்தபோது டிஎஸ்பி முரளி, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணகிரி போலீசார் சசிகலாவின் காரை நிறுத்தி அதிமுக கொடியை அகற்ற வேண்டும் என அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறினர். சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், கொடியை அகற்ற மறுத்தார். இதனையடுத்து, செந்தூர் பாண்டியனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. பின்னர் அதிமுக கொடியுடனே கார் புறப்பட்டு சென்றது.


latest tamil news



இதற்கு முன்னதாக எல்லை பகுதியான ஹத்திப்பள்ளியில் வரும் போது திடீரென அவரது காரை மாற்றினார். கார் மாற்றம் குறித்து விசாரித்ததில் ; "கார் எண் : TN 05 BX 3333 . இந்த கார் சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சம்பங்கி-க்கு சொந்தமானது. தனது காரில் தானே கொடி கட்டக்கூடாது, அதிமுக உறுப்பினர் காரில் வந்தால் என்ன செய்ய முடியும்" என்ற காரணத்திற்காக காரை மாற்றியதாக பேசப்பட்டது. சூளகிரி கடந்த பின்னர் சசிகலா முதலில் புறப்பட்ட TN 09 BX 3377 (ஜெயா பப்ளிகேஷனுக்கு சொந்தமானது ) காரிலேயே சென்று வருகிறார். இந்த காரில் தற்போது அதிமுக கொடி உள்ளது.


latest tamil news



கார் மாற்றம் குறித்து தினகரனிடம் நிருபர்கள் கேட்டபோது; காரில் இருக்கை வசதிக்காக மாற்றப்பட்டது, மேலும் ஏசி வசதியில் கோளாறு ஏற்பட்டது. இதற்காக காரை மாற்றினோம். டெக்னிக்கல் கோளாறு சரிசெய்யப்பட்டதும் கார் மாற்றப்படும் என தெரிவித்தார்.


latest tamil news





கோயிலில் வழிப்பட்ட சசி


ஒசூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று சசிகலா வழிப்பட்டார். கோயிலுக்கு செல்லும்போது சசிகலா அ.தி.மு.க ., கொடி வண்ணம் கொண்ட சால்வை அணிந்திருந்தார். மாலை 5 மணிக்கு ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா நிறுவிய சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அங்கு சசிகலா சில நிமிடங்கள் தியானம் செய்கிறார். இதனை தொடர்ந்து சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தொண்டர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manickam - Ernakulam,இந்தியா
09-பிப்-202113:19:48 IST Report Abuse
Manickam உன்மையில் நாடு எங்கு சென்று கொண்டு இருக்கிறது அட கடவுளே யார் இந்த சசிகலா உண்மையில் நாட்டிற்கு பாடுபட்ட தலைவர்கள் மறந்து ஒரு குற்றவாளியை இப்படி மதிப்பது தமிழர்களுக்கு அவமானம்
Rate this:
Kannan - Madurai,கனடா
10-பிப்-202120:29:58 IST Report Abuse
Kannanதிரு மாணிக்கம், என்னமோ நாடு இன்னைக்கு தான் இப்படி போன மாதிரி ஷாக் ஆகுறீங்க ? கடந்த முப்பது வருசமா இப்படித்தானே இருக்கு? இன்னும் கொள்ளை அடித்து தண்டனை பெற்ற ஜெயலலிதாவை மாக்கள் சாமி மாதிரி கும்புடலையா? இப்போ இருக்கும் அரசியல் வியாதியில் 99% குற்றவாளிகளே.. At least சசிகலாவாவது செய்த தவறுக்கு சிறை தண்டனை பெற்று இருக்கிறார்....
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
09-பிப்-202110:47:02 IST Report Abuse
Appan இந்தவிடயத்தில் யாரும் சசிகலாவுக்கு இவ்வளவு வர வேரப்பு கொடுப்பத்தை ஆதரிக்க வில்லை..பின் எப்படி இவ்வளவு தடபுடலாக செய்ய முடிகிறது..எல்லாம் பணம்..
Rate this:
Cancel
TMN TNJ - Kuala Lumpur,மலேஷியா
09-பிப்-202107:33:58 IST Report Abuse
TMN TNJ பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்த ஊழல் பெருச்சாளிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது அருவருப்பாக உள்ளது.
Rate this:
Truth Triumph - Coimbatore,இந்தியா
09-பிப்-202123:05:26 IST Report Abuse
Truth Triumphஎல்லாம் பணம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X