முக்கிய தொகுதியில் கிராமமே கோபம்... அணி தாவ பார்க்கறாங்க சரியான நேரம்!

Updated : பிப் 09, 2021 | Added : பிப் 08, 2021 | |
Advertisement
பணி நிமித்தமாக, டாடாபாத், பவர்ஹவுஸ் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, சமுதாய அமைப்பினர் பட்டியலிட்டு, பேசிக்கொண்டிருந்தனர்.அதைக்கேட்ட சித்ரா, ''ஏம்ப்பா, மித்து! ஓட்டு வங்கி அரசியலுக்காக, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எந்தளவுக்கு குறைச்சிருக்காங்க, பாரு. 137
 முக்கிய தொகுதியில் கிராமமே கோபம்... அணி தாவ பார்க்கறாங்க சரியான நேரம்!

பணி நிமித்தமாக, டாடாபாத், பவர்ஹவுஸ் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, சமுதாய அமைப்பினர் பட்டியலிட்டு, பேசிக்கொண்டிருந்தனர்.

அதைக்கேட்ட சித்ரா, ''ஏம்ப்பா, மித்து! ஓட்டு வங்கி அரசியலுக்காக, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எந்தளவுக்கு குறைச்சிருக்காங்க, பாரு. 137 சமுதாயத்தினருக்கு, 26.5 சதவீதம் ஒதுக்குறாங்க. ஆனா, குறிப்பிட்ட சமுதாயத்துக்காரங்க, 20 சதவீத ஒதுக்கீடு வேணும்னு, ஆளுங்கட்சியை மிரட்டுறாங்க, பார்த்தீயா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா, அரசியல் அதிகாரத்தை கைப்பத்துறதுக்காக, இப்படியெல்லாம் செய்றாங்க. இதெல்லாம் ரொம்ப கொடுமை. அவுங்களால, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர்கள், வேலைவாய்ப்பு கிடைக்காம பாதிக்கப்படுறாங்க,'' என்ற மித்ரா, அருகாமையில் உள்ள ஜூஸ் கடைக்குள் நுழைந்தாள்.

ஜிகர்தண்டா ஆர்டர் கொடுத்த சித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்க மிரண்டு போயி இருக்காங்களாமே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள்.

''ஆமாக்கா, இதுநாள் வரை பொறுப்புக்கு வர முடியாம இருக்கறவங்களும், ஓரங்கட்டப்பட்ட சீனியர்களும் அணி தாவுறதுக்கு தயாரா இருக்காங்களாம். முதல்ல யாரு போறாங்கன்னு பார்க்குறதுக்கு, 'வெயிட்' பண்றாங்க. ஒருத்தர் பின்னாடி ஒருத்தருன்னு, தாவுறதுக்கு நல்ல நாள் பார்த்துட்டு இருக்காங்க,''ஜிகர்தண்டாவை ருசித்த சித்ரா, ''முக்கியமான பிரமுகரும் போயிட்டதா கேள்விப்பட்டேனே,'' என, கொக்கி போட்டாள்.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன்,'' என, மித்ரா சொன்னபோது, சித்ரா மொபைல்போன் சிணுங்கியது. ''ராதா, கொஞ்சம் பிஸியா இருக்கேன்; பிறகு கூப்பிடுறேன்,'' என, இணைப்பை துண்டித்து விட்டு, ''தி.மு.க.,வினரும் குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே,'' என, கேட்டாள்.

''ஸ்டேட் பட்ஜெட் கூட்டம் முடிஞ்சதும், தேர்தல் அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்குறாங்க. சீட் வாங்குறதுக்கு, கட்சி தலைமைக்கு செல்வாக்கை காட்டணும் இல்லையா. அதுக்காக, தினமும் ஏதாச்சும் ஒரு இடத்துல, ஒவ்வொரு கோஷ்டியும் போராட்டத்துல ஈடுபடுது,''

''அதெல்லாம் இருக்கட்டும், திருமண விழாவுக்கு, தொகுதி முழுக்க, வீடு வீடா 'இன்விடேஷன்' கொடுக்குறாங்களாமே,''

''ஆமாக்கா, ஜெ., பிறந்தநாளையொட்டி, பேரூர் செட்டிபாளையத்துல, 73 ஜோடிக்கு இலவச திருமண விழா நடத்த, தடபுடலா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் போயி, சில்வர் தட்டுல 'இன்விடேஷன்' வச்சு, ஒரு வேஷ்டி, சட்டை துணி, சேலை, ஹாட் பாக்ஸ் கொடுக்குறாங்க,''

''அதை விடு, ''பி.டி.ஓ.,வுக்கு எதிரா, ஒரு கிராமமே திரும்பி இருக்காமே,'' என, சித்ரா கிளறினாள்.

''அதுவா, மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு துறை அலுவலகங்களில், காருண்யா நகருன்னு இருக்கிற பெயர் பலகையை எடுத்துட்டு, நல்லுார் வயல்னு வைக்கிறதுன்னு, ஏகமனதா தீர்மானம் நிறைவேத்துனாங்க,''

''இதை கேள்விப்பட்ட பி.டி.ஓ., ஜெயக்குமார், ஊராட்சி தலைவரை கூப்பிட்டு, மிரட்டியிருக்காரு. அதனால, பழங்குடியின மக்கள், அவர் மீது கோபத்துல இருக்காங்க. அவர் மேல கலெக்டர்கிட்ட புகார் கொடுக்கப் போறாங்க. ஒன்றிய அலுவலகத்தையும் முற்றுகையிட, பிளான் வச்சிருக்காங்க. அதே நேரம், தீர்மானம் நிறைவேத்துன ஊராட்சி தலைவர், உறுப்பினர்களை கவுரவிச்சு, பாராட்டு விழா நடத்தப் போறாங்களாம்,''

''இவ்ளோ பிரச்னை நடந்தும், மாவட்ட நிர்வாகம், 'கப்சிப்'ன்னு இருக்கே,''

''வி.ஐ.பி., தொகுதிங்கிறதுனால, நடவடிக்கை எடுக்குறதுக்கு, மாவட்ட நிர்வாகம் தயங்குது. 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டு இருக்குதாம். ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்திடுமோன்னு, ஆளுங்கட்சி பயப்படுது,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.

பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''மித்து, எனக்கொரு விஷயம் புரியலை. சென்னையில் நடந்த ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் கூட்டத்துக்கு, நம்மூர்ல இருந்து, முக்கிய நிர்வாகிகள் போகலையே, ஏன்,''

''வழக்கமா, பிளைட்டுல பறந்து போறவங்க, எட்டி பார்க்கலைன்னா, என்ன அர்த்தம்? இப்போதைக்கு பதுங்குறாங்க. அரசியல் சூழலை, இங்கிருந்தே கண்காணிக்கிறாங்க. சூழலுக்கு தகுந்த மாதிரி, 'மூவ்' பண்ணப்போறதா, ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க,''

''தாலிக்கு தங்கம் வழங்குற திட்டத்தை, ஏரியா வாரியா நடத்தப் போறாங்களாமே,''

''யெஸ், மித்து! நானும் கேள்விப்பட்டேன். பயனாளிகள் 'லிஸ்ட்' ரெடியா வச்சிருக்காங்க; பகுதி வாரியா பிரிச்சு விழா நடத்துறதுக்கு, பிளான் வச்சிருக்காங்க,''

''அக்கா, நம்ம மாவட்டத்துல, ஆரம்ப சுகாதார நிலையத்துல, குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கறதில்லை. சுகாதாரத்துறையினரை கேட்டா, வாய் திறக்க மறுக்குறாங்களாம்,''

''அடக்கொடுமையே, இதெல்லாம் வழக்கமா செய்ற உதவிதானே, இதையெல்லாம் எதுக்கு நிறுத்தி வைக்கிறாங்க,'' என, நொந்து கொண்ட சித்ரா, ''துணை கலெக்டர் ஒருத்தரை, கரூருக்கு மாத்திட்டாங்களாமே,'' என, கேட்டாள்.

அவர் மேல ஏகப்பட்ட புகார் வந்துச்சு. விசாரணை நடத்திய கலெக்டர், இட மாறுதல் செய்யச் சொல்லி, அரசுக்கு பரிந்துரை செஞ்சாரு. வெளியூருக்கு மாத்துவாங்கன்னு நினைச்சிட்டு இருந்தாங்க; ஆனா, கலெக்டருக்கே நேர்முக உதவியாளரா பதவி கொடுத்திட்டாங்க,''

''அதிர்ச்சிக்குள்ளான மாவட்ட அதிகாரிகள், சொல்ல வேண்டிய இடத்தில், பிரச்னையின் ஆழத்தை சொல்லியிருக்காங்க.

இப்ப, கரூர் மாவட்டத்துக்கு துாக்கியடிச்சிருக்காங்க,''உப்பிலிபாளையம் சிக்னலை கடந்தபோது, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''தேர்தல் நெருங்குறதுனால, போலீசிலும் டிரான்ஸ்பர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

வழக்கம்போல, தேவையான ஸ்டேஷனா பார்த்து, சில இன்ஸ்.,கள் கேட்டு வாங்கி, இடம் பெயர்ந்து போறாங்க. அரசியல்வாதிகளுக்கு நெருக்கமா இருக்கறதுனால, உளவுத்துறையை சேர்ந்தவங்களை மட்டும் மாத்தாம இருக்காங்களாம்.

அதனால, கரன்சி மழையில் குளிக்கிறாங்க. சில உளவுத்துறை போலீசார், கோடீஸ்வரராகிட்டாங்க,''அப்போது, எதிர் திசையில் கல்வித்துறை ஜீப் சென்றது.

அதை கவனித்த மித்ரா, ''எஸ்.எஸ்.குளம் டி.இ.ஓ.,வை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாத்தியிருக்காங்க. செல்வாக்கை பயன்படுத்தி, எப்படியாச்சும் ஆர்டரை 'கேன்சல்' செய்றதுக்கு, 'மூவ்' பண்ணியிருக்காங்க; முடியலை. வேற வழியில்லாம, பதவியில் இருந்து வெளியேறி இருக்காங்க,''

''அவுங்க மேல, புகார் இருக்கறதா சொன்னாங்களே,''

''ஆமாக்கா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஏகப்பட்ட புகார் போயிருக்கு. அதையெல்லாம், விசாரிக்கச் சொல்லி, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவிட்டு இருக்காங்களாம். முதல்கட்டமா, டிரான்ஸ்பர் செஞ்சிருக்காங்க. இதை கேள்விப்பட்ட ஆசிரியர்கள் பலரும், பட்டாசு வெடிக்கிறது; பூங்கொத்து கொடுக்குற மாதிரியான எமோஜிகளை, வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு, அமர்க்களப்படுத்திட்டாங்களாம்,'' என்றபடி, டவுன்ஹால் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.

அங்கு, பொதுமக்களுக்கு இடையூறாக, ரோட்டை மறித்து, தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த சித்ரா, ''ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்கறது, தி.மு.க.,காரங்களுக்கு இப்பதான் தெரியுதா,'' என, அங்கலாய்த்தாள்.

''அக்கா, இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட்,'' என்ற மித்ரா, ''என்.டி.சி., மில் பிரச்னை இழுத்துக்கிட்டே இருக்கே,'' என, நோண்டினாள்.

''என்.டி.சி., மில் மேலாளர்கள் சிலர், குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்துக்கு சாதகமா செயல்படுறதுனால, புகைச்சல் ஏற்பட்டிருக்கு. தொழிற்சங்கத்தினர் இரு பிரிவா பிரிந்து, டில்லியில் மனு கொடுத்திருக்காங்க. கம்யூ., சார்ந்த தொழிற்சங்கத்தினர், அதிகாரிகள் மீதும் புகார் சொல்லிட்டு வந்திருக்காங்க,''

''அக்கா, தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை உடைக்கணும்னு பிளான் போட்டிருப்பாங்க; செஞ்சிட்டாங்களா,'' என்றபடி, அலுவலகத்தை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X