பொது செய்தி

இந்தியா

இது உங்கள் இடம் : அனைவரையும் விடுதலை செய்யுங்கள்!

Updated : பிப் 09, 2021 | Added : பிப் 09, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இயற்கையாக இறக்கும் வரை சிறையில் இருப்பது தான், ஆயுள் தண்டனை எனப்படும். ஆனால், நம் நாட்டில் ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய விரும்புவது, வேதனையளிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ், எட்டு போலீசார், ஏழு அப்பாவி மக்கள் என, 16 பேர்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இயற்கையாக இறக்கும் வரை சிறையில் இருப்பது தான், ஆயுள் தண்டனை எனப்படும். ஆனால், நம் நாட்டில் ஆயுள் தண்டனை பெற்ற கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய விரும்புவது, வேதனையளிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ், எட்டு போலீசார், ஏழு அப்பாவி மக்கள் என, 16 பேர் துடிதுடிக்க கொலை செய்யப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைய, மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியோரை, எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



latest tamil news


மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஏழு பேரும், கூலிப்படையைச் சேர்ந்தோர். விடுதலைப்புலிகளிடம் பல கோடி ரூபாய் கூலியாகப் பெற்று, 1991ல், 16 அப்பாவிகளை கொலை செய்தனர்.குற்றம் நிரூபிக்கப்பட்ட அவர்கள், ஆயுள் தண்டனை என்ற பெயரில், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.அவர்களிடம், பல கோடி ரூபாய் இருப்பதால், மாதா மாதம் நீதிமன்றத்தில் மனு போடுவதும், 'பெயில்' பெற்று, வெளியே உல்லாச உலா சுற்றுவதும், ஏதோ புது மாப்பிள்ளை போல வாழ்கின்றனர்.இவர்களை விடுவிக்க வேண்டும் என, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும், போர்க்கொடி துாக்கியுள்ளன. அதேநேரம், பலியான, 16 பேர் மற்றும் படுகாயம் அடைந்தோரின் குடும்பத்தார் படும் அவஸ்தைகளை பற்றி, யாரும் சிறிது கூட வருந்தவில்லை.


latest tamil news



கொலையாளிகள் விரைவில் விடுதலையாக போவது அறிந்து, நடுநிலையாளர்கள் வருந்துகின்றனர்.அவர்களை விடுவிக்கும் முன், நம் நாட்டில் உள்ள அனைத்துச் சிறைகளிலும், தண்டனை அனுபவிக்கும் கிரிமினல் குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். சிறையில் உள்ள பயங்கரவாதி, கொலைக் குற்றவாளி, கொள்ளைக்காரன், போதைப் பொருள் கடத்தல் கும்பல், கள்ளச்சாராயம் காய்ச்சியவர், மணல் திருடர் என, அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.ஏனெனில், முன்னாள் பிரதமர் உட்பட, 16 பேரை கொலை செய்த குற்றத்தை விட, மேற்கண்டவை பெரிய குற்றங்கள் இல்லை. அவர்களுக்காகவும், தமிழக அரசியல் கட்சிகள் வருத்தப்பட்டு, விடுதலை செய்ய வேண்டும் என, போராட வேண்டும்.


Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
10-பிப்-202117:24:14 IST Report Abuse
raja நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. மக்களும் எதையும் கண்டு கொள்வதில்லை. முன்னாள் பிரதமர் சிங்கள ராணுவம் ஏன் தாக்க முற்பட்டது. இதை புரிந்து கொள்ள இயலாத மனித உருவில் வருபவர்கள் எல்லாம் தலைவர்கள். என்று மக்கள் இம்மாதிரி தலைவர்களை எதிர்த்து கிளம்புறகிரகளையோ அன்று தான் தமிழ் நாடு உருப்படும்
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
10-பிப்-202117:19:47 IST Report Abuse
raja வைகோ முதல் கம்யூனிஸ்ட் வரை அனைவரும் முட்டாள்களாக மக்களை மாற்றி வைத்து ரொம்ப நாள் அஆகிவிட்டது. மக்கள் என்று வீறு கொள்கிறார்களோ அன்று தான் இந்த அரசியல் சாக்கடை தலைவர்களின் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும் கேடுகெட்டா தலைவர்கள் பவனி வரும் சமுதாயம் ஒளிவதே நல்லது
Rate this:
Cancel
ppmkoilraj - erode.10,இந்தியா
10-பிப்-202115:31:01 IST Report Abuse
ppmkoilraj இலங்கை தமிழர் தலைவர்கள் மட்டுமல்ல தமிழர்கள் கூட தமிழகத்தில் இருக்கிற அரசியல்வாதிகள் தலையிடாமல் உங்க வேலையை பாருங்கள் என்றுதான் இப்பொழுதும் கூறுகிறார்கள் சீமான் போன்றவர்கள் சும்மா கையில் எடுத்துக்கொண்டு ஆடுவதும் ஏதோ இவர்கள் தான் தமிழர்களுக்கு என்றே பிறந்தவர்கள் போலவும் பேசுவதும் நக்கல் செய்வதும் கணக்கில் அடங்காமல் போகிறது ராஜீவ்காந்தி தமிழர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தம் போட்டு இருக்கின்ற காரணத்தால் தான் இலங்கை கடற்படை ராணுவ அணிவகுப்பின் போது இலங்கையில் சிங்கள சிப்பாய் துப்பாக்கி எடுத்து திருப்பி அடித்துக் கொலை செய்ய முயற்சித்தான். இது வரலாறு பிரபாகரனை முதலமைச்சராக பதவியேற்க சொன்னவர் ராஜீவ்காந்தி. முதலமைச்சராக பதவி யேற்றால்வானளாவிய அதிகாரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார். இப்பொழுது ஆளுகின்ற ராஜேஸ்வரன் அதிகாரமின்றி முதலமைச்சராக உள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X