அறிவியல் ஆயிரம்
மாற்று மருத்துவம்
மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஓமியோபதி. இதனை கண்டுபிடித்தவர் ஜெர்மன் இயற்பியலாளர் சாமுவேல் ஹானிமன். 1755 ஏப்., 10ல் பிறந்த இவர், அலோபதி மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனியின் மான்ஸ்பீல்டு பகுதியில் பணியாற்றினார். ஆனால் அலோபதி மருத்துவத்தின் மீது திருப்தி இல்லாததால், ஓமியோபதி மருத்துவ முறையை 1796ம் ஆண்டு கண்டுபிடித்தார். ஓமியோபதியின் தந்தை என கருதப்படுகிறார். ஓமியோபதி மருந்துகள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது.
தகவல் சுரங்கம்
இரண்டாவது உயரமான சிகரம்
இந்தியாவின் மிக உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. இரண்டாவது உயரமான சிகரம் நந்தா தேவி. இது உலகளவில் 23வது உயரமான சிகரம். இது உத்தர கண்ட்டின் சமோலி மாவட்டத்தில் உள்ளது. 1975ல் சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை இது இந்தியாவின் உயரமான சிகரமாக இருந்தது. இதன் உயரம் 25,643 அடி. இது ரிஷிகங்கா மற்றும் கோரிகங்கா பள்ளத்தாக்கு இடையில் அமைந்துள்ளது. இச்சிகரத்தில் நந்தா தேவி தேசியப்பூங்கா 1982ல் அமைக்கப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரத்தில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE