போபால்: கட்சிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என காங்., கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் குரான் மீது சத்தியம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ம.பி.,யில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி., மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலையொட்டி, காங்., கட்சி நடத்திய உள்கட்சி கூட்டத்தில், கட்சிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என புனித நூலான குரான் மீது சத்தியம் செய்துள்ளனர். இந்தூர்-1 சட்டசபை உறுப்பினர் சஞ்சய் சுக்லா, கட்சியின் நகர பிரிவு தலைவர் வினய் பக்லிவால், காங்., மேயர் வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் காங்., தலைவர்கள் மேடையில் நின்று உறுதிமொழி எடுப்பது வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த மேற்கு இந்தூரின் சந்தன் நகர் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அரசியல் நடவடிக்கைகளில், புனித நூலான குரானை பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, முஸ்லிம் மத தலைவர்களும், பா.ஜ., கட்சியும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.