கடந்த 300 நாளில் 60 முறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்: பெட்ரோலிய அமைச்சர்

Updated : பிப் 10, 2021 | Added : பிப் 10, 2021 | கருத்துகள் (89)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'கடந்த 300 நாளில் 60 முறை மட்டுமே விலை உயர்ந்துள்ளது,' எனக் கூறியுள்ளார்.இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இது தொடர்பாக ராஜ்யசபாவில் காங்., எம்.பி.,
Petrol, Diesel Price, Minister, All Time High, Wrong, Parliament, பெட்ரோல், டீசல், விலை, உயர்வு, அமைச்சர்,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'கடந்த 300 நாளில் 60 முறை மட்டுமே விலை உயர்ந்துள்ளது,' எனக் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இது தொடர்பாக ராஜ்யசபாவில் காங்., எம்.பி., வேணுகோபால் கேள்வியெழுப்பினார். இதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: பெட்ரோலிய பொருள்கள் மீது வரி விதிப்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம். கடந்த 300 நாட்களில் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல் விலை 7 முறையும், டீசல் விலை 21 முறையும் குறைந்துள்ளன.


latest tamil news



மேலும் சுமார் 250 நாட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்துள்ளது. எனவே இதுவரை இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டுவது தவறு. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,கானா
11-பிப்-202113:44:47 IST Report Abuse
moodi masthan beembai இன்றைய கச்சாஎண்ணெய் விலைக்கு பெட்ரோல் ரூ. 30 அடிப்படை விலையில் தயார் ஆகிறது. அதன் மேல் மத்திய அரசு ரூ.33 (அதாவது 110 % ) வரி விதிக்கிறது . அதன்பிறகு அதன்மேல் கூடுதலாக மாநிலஅரசு ரூ.23.25 (அதாவது அடிப்படை விலையில் 77.5 % ) வரி வருவாய் கிடைக்கிறது . பெட்ரோல்(பங்க்) விற்பனையாளர் கமிஷன் ரூ. 3.75 (அதாவது 12.5 % ) எடுக்கிறார். சுருக்கமாக சொல்வதென்றால் ரூ.30 க்கு தயாரிக்கப்படும் பெட்ரோலை ரூ. 90 க்கு வாங்குகிறோம். அதாவது 200% கூடுதல் விலையில் வாங்குகிறோம். அதில் பெரும்பாலும் வரியாகவும், சிறிதளவு விற்பனையாளர் கமிஷனாகவும் செல்கிறது.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-பிப்-202111:38:13 IST Report Abuse
ஜெயந்தன் தலை முதல் வால் வரை...பிஜேபி யில் எல்லாமே கோமாளிகள் தான்...
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
11-பிப்-202111:36:23 IST Report Abuse
ஜெயந்தன் ....மந்திரியாக ஆனால் இப்படித்தான் இருக்கும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X