அறிவியல் ஆயிரம்
இளமையில் முதுமை
பகலை விட இரவு நேரத்தில் உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு, விரைவிலேயே முதுமை அடைவதற்கு 1.6 மடங்கு வாய்ப்பு உள்ளது என சுவிட்சர்லாந்து ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரே வயதை உடையவர்களில் இரவில் அதிக உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், காலையில் அதிக உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் என இரு பிரிவாக பிரித்து ஆய்வு செய்தனர். இதில் இரவில் அதிக ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு முதுமைக்கான அறிகுறி விரைவிலேயே ஏற்படுகிறது. மேலும் அல்சீமர் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
முதல் தலைமை நீதிபதி
டில்லியின் முதல் பெண் நீதிபதியாக இருந்தவர் லெய்லா சேத். இவர் 1930 அக்., 20ல் லக்னோவில் பிறந்தார். நாட்டில் உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றவர். 1991 ஆக., 5 முதல் 1992 அக். 20 வரை ஹிமாச்சல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். 1997 முதல் 2000 வரை 15வது சட்டகமிஷன் உறுப்பினராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின் கோல்கட்டாவில் ஸ்டெனோகிராபராக பணியாற்றினார். திருமணம் செய்த இவர் லண்டன் சென்றார். அங்கு சட்டப்படிப்பை முடித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE