அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி'

Updated : பிப் 12, 2021 | Added : பிப் 11, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை : ''தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாவட்ட வாரியாக பெண்களுக்கு இலவசமாக கல்வி தொழில் பயிற்சி தரும் வகையில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கொளத்துார் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு செயல் வடிவம்
ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுக, தி.மு.க., குட்கா, உயர்நீதிமன்றம்,

சென்னை : ''தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாவட்ட வாரியாக பெண்களுக்கு இலவசமாக கல்வி தொழில் பயிற்சி தரும் வகையில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்துார் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கத் தான் 'அனிதா அச்சீவர்ஸ் அகாடமி'யை கொளத்துார் தொகுதியில் 2019ல் துவக்கினேன். கணினி பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்ற பலர் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.வேலை கிடைத்தது என்பதை விட சம்பளம் கிடைக்கிறது என்பதை விட அவர்களுக்கு தன்னம்பிக்கை வந்திருப்பது தான் முக்கியம். கணினி வகுப்போடு தையல் பயிற்சி
இளைஞர்களுக்கு தனி பயிற்சி மையம் என விரிவடைந்து அனிதா அச்சீவர்ஸ் அகடமி இன்றைக்கு மினி கல்லுாரியை போல வளர்ந்து வந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.தமிழகம் முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகடமி தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தொடர்கிறது பயணம்தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: இரண்டு கட்டப் பயணங்கள் நிறைவுற்ற நிலையில் மூன்றாவது கட்டமாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை நாளை துவக்குகிறேன்.விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கி கடலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதி மக்களை சந்திக்கிறேன். அவர்களின் குரல் கேட்டு குறை அறிந்து ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான பயணம் இது. கருணாநிதியின் இல்லத்தின் முன் அறிவிக்கப்பட்ட இந்த செயல் திட்டம் வெற்றிக்கனியாக விளைந்து தி.மு.க. ஆட்சியை கருணாநிதி ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை ஓயாது.உங்களில் ஒருவனான நான் தொண்டர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மூன்றாம் கட்ட பயணத்தை துவக்குகிறேன். தமிழக மக்கள் தி.மு.க. மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை நிறை வேற்றுவதற்காக. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


விரைவில் முடியும்-ஸ்டாலின் அறிக்கைதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதை சுட்டிக் காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களை சட்ட சபைக்கு எடுத்துச் சென்று காண்பித்தோம்.கமிஷன் வாங்கி அதன் விற்பனைக்கு பச்சைக் கொடி காட்டியவர்களுக்கு பொறுக்கவில்லை. எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தனர். முதல் முறையாக இந்த நடவடிக்கைக்கு தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினர். அதையும் இன்று ரத்து செய்து விட்டது உயர் நீதிமன்றம். இந்த வேகத்தை குட்கா விற்பனையை தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கின்றனர். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
13-பிப்-202114:19:55 IST Report Abuse
Sadagopan Varadhachari ஏதாவது செய்து வழக்கை சீக்கிரம் முடிங்க ...அப்புறம் தமிழ் நாட்டில் சில இடங்களில் சட்ட விரோதமாக வி ...,,,,.ரம் நடக்கிறது என்று கூறி வி,,,,,,,,,,,ரிகளை சட்ட சபைக்கு அழைத்து வந்து விடப்போகிறார்கள்
Rate this:
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
12-பிப்-202112:27:35 IST Report Abuse
navasathishkumar பெரிய கட்டபொம்மன் ...சீட் கிடைக்கலைன்னு செத்தா அவங்க பேர்ல அகடாமியாயா?
Rate this:
Cancel
ramesh - kanchipuram,ஓமன்
12-பிப்-202100:09:06 IST Report Abuse
ramesh தி''''''''''''''''''''' திருடர்கள்'''''''''''''''''''''''' மூ''''''''''''''''''''''''' முன்னேற்ற''''''''''''''''''''' கா '''''''''''''''''''''''''''கழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X