மே.வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது: அமித்ஷா

Updated : பிப் 11, 2021 | Added : பிப் 11, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
கூச்பெகார்: மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களால் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மே.வங்க மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூச்பெகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: ஜெய்ஸ்ரீராம் என கோஷம்
westbengal, amitshah, HMamitshah, home minister amit shah, mamata banarjee, chief minister mamata, mamata, Modi, PmModi, மே.வங்கம், அமித்ஷா, உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ஜெய் ஹராம், மம்தா, முதல்வர் மம்தா, மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, உறவினர், சட்டசபை தேர்தல்

கூச்பெகார்: மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களால் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மே.வங்க மாநிலத்திற்கு சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூச்பெகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது: ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட்டதற்காக கோபப்பட்ட மம்தா, தேர்தல் முடிவில் அவரும் ஜெய் ஸ்ரீராம் என சொல்வார் என உறுதியாக சொல்கிறேன். ஜெய் ஸ்ரீராம் என இந்தியாவில் உச்சரிக்காமல், பாகிஸ்தானிலா உச்சரிப்பார்கள்.


latest tamil news


வரும் சட்டசபை தேர்தல், மோடியின் வளர்ச்சி கொள்கைக்கும், மம்தாவின் அழிவு கொள்கைக்கும் இடையிலான மோதல். மோடியின் அனைத்து திட்டங்களையும் மம்தாவும் அவரது உறவினரும் தடுத்து நிறுத்தியுள்ளீர்கள். அதனை மே மாதத்திற்கு பிறகு உங்களால் தடுக்க முடியாது. மக்களுக்காக மோடி உழைக்கிறார். ஆனால், மம்தா உறவினரின் நலனுக்காக உழைக்கிறார். மம்தாவிற்கு, உறவினர் தான் முக்கியமாக உள்ளார். நேதாஜி பிறந்த நாள் விழாவிலும், மோடி மீது மம்தா கோபப்பட்டார். நேதாஜி நிகழ்ச்சியில், அரசியல் செய்வதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

திரிணமுல் குண்டர்களால், 130 பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து கொலைகாரர்களும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். மே.வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதை திரிணமுல் குண்டர்களால் தடுக்க முடியாது. இங்கு, பா.ஜ.,வை யாரும் தடுக்க முடியாது. மாநிலத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்.5 ஆண்டுகளில் ஊடுருவல் காரர்களிடம் இருந்து மே.வங்கத்தை விடுவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-202104:35:46 IST Report Abuse
Mani . V ஆமாம், அப்படித்தான் செட் செய்யப் போகிறோம்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
11-பிப்-202122:40:25 IST Report Abuse
m.viswanathan ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிவிடுகிறோம் . பெட்ரோல் விலையை குறைத்து கொடுப்பீர்களா ?
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
12-பிப்-202112:17:40 IST Report Abuse
Yezdi K Damoஇது கட்டுமரத்தோட டெக்னீக் ஆச்சே ....
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
11-பிப்-202121:53:07 IST Report Abuse
Ray அடுத்த மாதம் தமிழகம் வந்து இதே அறிவிப்பை வெளியிடுவாரோ?
Rate this:
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
12-பிப்-202112:25:30 IST Report Abuse
Yezdi K Damoஅண்ணா ,ஓபிஎஸ் ,ஈபிஎஸ்ஸை நம்புவதைவிட பிஜேபியை நம்பலாம் . சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே சால சிறந்தது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X