சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 11, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்விரல் நுனி 'உயிரினம்'இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மடகாஸ்கார் தீவு பகுதியின் மழைக்காடுகளில் பச்சோந்தி உயிரினத்தின் மிகச்சிறிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அழியும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இதுதான் பூமியில் வாழும் மிகச்சிறிய உயிரினமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதன் அளவு விரல் நுனியின் அளவு தான் உள்ளது. இதன்

அறிவியல் ஆயிரம்
விரல் நுனி 'உயிரினம்'

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மடகாஸ்கார் தீவு பகுதியின் மழைக்காடுகளில் பச்சோந்தி உயிரினத்தின் மிகச்சிறிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அழியும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இதுதான் பூமியில் வாழும் மிகச்சிறிய உயிரினமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதன் அளவு விரல் நுனியின் அளவு தான் உள்ளது. இதன் உடல்பகுதியின் நீளம் 13.5 மி.மீ., மட்டுமே. மூக்கில் இருந்து வால் வரை மொத்த நீளம் 22 மி.மீ. இதன் பெண் வகை உயிரினத்தின் நீளம் சற்று கூடுதலாக 29 மி.மீ., ஆக உள்ளது.

தகவல் சுரங்கம்
டார்வின் தினம்
அறிவியல் துறைக்கு சார்லஸ் டார்வினின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாகவும், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் டார்வின் பிறந்த தினமான பிப். 11 'டார்வின் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. 167 நாடுகளின் 400 விஞ்ஞானிகள் 1909ல் லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் சந்தித்தபோது, இத்தினம் உருவாக்கப்பட்டது. இவர் 1809 பிப். 12ல் பிரிட்டனில் பிறந்தார். தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை 1859ல் 'உயிரினங்களின் தோற்றம்' என்ற நுாலாக வெளியிட்டார். 'குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவானான்' என கூறினார். 1882 ஏப். 19ல் மறைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X