அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிரமத்திற்கிடையே நல்ல பட்ஜெட்: நிதி அமைச்சர் மீது தி.மு.க., பரிவு

Updated : பிப் 13, 2021 | Added : பிப் 12, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
''பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில், நல்லதொரு பட்ஜெட்டை தர, நிதியமைச்சர் முயற்சித்துள்ளார்,'' என, தி.மு.க.,- எம்.பி., ராஜ்யசபாவில் பரிவாக பேசிய சம்பவம், அரங்கேறியது.மத்திய பட்ஜெட் மீதான விவாதம், நேற்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. இதில் தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: மனித குலத்தை அச்சுறுத்தும் கொரோனா தொற்று சூழல் ஒருபுறம்.
பட்ஜெட், நிதி அமைச்சர், தி.மு.க., பரிவு, எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க.,தம்பிதுரை

''பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில், நல்லதொரு பட்ஜெட்டை தர, நிதியமைச்சர் முயற்சித்துள்ளார்,'' என, தி.மு.க.,- எம்.பி., ராஜ்யசபாவில் பரிவாக பேசிய சம்பவம், அரங்கேறியது.


மத்திய பட்ஜெட் மீதான விவாதம், நேற்று ராஜ்யசபாவில் நடைபெற்றது.

இதில் தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: மனித குலத்தை அச்சுறுத்தும் கொரோனா தொற்று சூழல் ஒருபுறம். உலகம் முழுதும் நிலவும் பொருளாதார மந்தநிலை இன்னொரு புறம். இத்தகைய கடினமான சூழ்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது, எந்த நிதியமைச்சருக்கும் எளிதல்ல.அந்த வகையில், நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, நல்லதொரு பட்ஜெட்டை தாக்கல் செய்ய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சி செய்துள்ளார். ஆனால், அது பயன்தருமா என்பது தெரியவில்லை.

ஊரடங்கு காலத்தில், கூலி தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த தீர்வும் கூறப்படவில்லை.கடந்த, 40, 50 ஆண்டுகளாக, முந்தைய அரசுகளால் உருவாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்க துவங்கியுள்ளீர்கள்.இது எப்படி சரியாக இருக்க முடியும். நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது தவறு.பெரு முதலாளிகள் லாபம் பார்க்க உதவும் இந்த அரசு, தங்களை தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு நல்ல நிர்வாகத்தை தரும் அரசாக இல்லை.இவ்வாறு, அவர் பேசினார்.


'பிரதமர் மோடியையே சாரும்'



அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:உலக நாடுகள் எல்லாம் இந்தியாவிடமிருந்து, கொரோனா தடுப்பூசிகளை கேட்டு வாங்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. இதற்கான பெருமை அனைத்தும் பிரதமர் மோடியையே சாரும். போகுமிடங்களில் எல்லாம், 'தொகுதிக்கு என்ன செய்தீர்கள்' என, எம்.பி.,க்களிடம் மக்கள் கேட்கின்றனர். எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகுதி மேம்பாட்டு நல நிதியை விடுவிக்க வேண்டும்.கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டது.இப்படி சிறப்பாக பணியாற்றும் மாநில அரசுக்கு, நிலுவை நிதிகளை தாமதப்படுத்தாமல் வழங்கவேண்டும். மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் வழியில் அமைந்த கோவை- - திருச்சி நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்றவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர்- -


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-பிப்-202118:33:22 IST Report Abuse
J.V. Iyer இந்த மத்திய அரசைவிட ஒரு நல்ல அரசை இனிமேல் இந்தியாவுக்கு பாஜகவை தவிர மற்ற எந்த கட்சிகளாலும் தர இயலாது.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-பிப்-202121:22:30 IST Report Abuse
J.Isaac வண்டி திடீரென்று தடம் மாறுதே
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
12-பிப்-202118:59:02 IST Report Abuse
thulakol கனி அக்கா டிஹாருக்கு போகாமல் இருக்க ஆடி போடுகிறார் போல் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X